டிரெண்டாகும் தலைவி... அதுல விட்டதை இதுல சரிகட்டிட்டாய்ங்க... அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டுகள்

By

Recommended Video

Thalaivi : Arvind Swami's MGR look | வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் லுக்

சென்னை: நடிகர் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் லுக் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து டிவிட்டரில் தலைவி டிரெண்டாகி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

எம்.ஜி.ஆர். ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

இந்நிலையில், இந்தப் படத்தில் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார்.

ஸ்பெஷல் டீசர்

ஸ்பெஷல் டீசர்

அவரது இரண்டு லுக்குகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் படக்குழு இன்று வெளியிட இருக்கிறது. இதற்கிடையே, அரவிந்த் சாமியின் லுக்குகள் இரண்டும் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து 'தலைவி' சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கங்கனா லுக்கை விட

'வாவ் இது எதிர்பாராதது. சூப்பர்... கங்கனா லுக்கை விட அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் போல அப்படியே இருக்கிறார்' என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
'ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா கேரக்டரில் அவர்கள் செய்த தவறை, இதில் சரிகட்டிவிட்டார்கள்' என்று மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா தோற்றம்

ஒரு ரசிகர், அரவிந்த் சாமியின் தோற்றம் அருமை. ஜெயலலிதாவின் தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் மாதிரி தெரியல

இன்னொரு ரசிகர், இது அரவிந்த் சாமி மாதிரியும் தெரியல, எம்.ஜி.ஆர் மாதிரியும் தெரியல என்று குறை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X