இன்னும் சில தினங்களில் தளபதியின் பிறந்தநாள்... தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா?

சென்னை : தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளை வரும் 22ம் தேதி கொண்டாடவுள்ளார்.

இதையொட்டி பல்வேறு நிகழ்வுகளை அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது தளபதி 65 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முந்தைய நாள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

47வது பிறந்தநாள்

47வது பிறந்தநாள்

தளபதி என்று தன்னுடைய ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இந்த மாதம் 22ம் தேதி அவர் தனது 47வது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிட்டு வருகின்றனர்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு?

பர்ஸ்ட் லுக் வெளியீடு?

இந்நிலையில் அவர் தற்போது நடித்துவரும் தளபதி 65 படத்தின் டைட்டில் அல்லது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முந்தைய நாள் மாலையில் அதாவது 21ம் தேதி மாலையில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதையொட்டி தளபதியின் ரசிகர்கள் தாங்களாகவே புதிய போஸ்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டீசர், ட்ரெயிலர் வெளியாகும்

டீசர், ட்ரெயிலர் வெளியாகும்

ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய் பிறந்தநாளின்போது அவர் அப்போது நடிக்கும் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை வெளியிடுவதை தயாரிப்பு குழுவினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன்மூலம் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அவரது ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

சூட்டிங் தள்ளிவைப்பு

சூட்டிங் தள்ளிவைப்பு

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்தபின்பு சூட்டிங்கை துவக்கலாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதையடுத்து சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Sura Director தலைமையில் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி | Filmibeat Tamil
செப்டம்பர் மாதத்தில் சூட்டிங்

செப்டம்பர் மாதத்தில் சூட்டிங்

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் பங்கேற்கவிருந்த சூட்டிங்கிற்காக வணிக வளாகத்திற்கான செட்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X