நீ கண்ணை மூடிக்கோ... நான் என் காதலை எழுதறேன்... விளையாட்டு காட்டும் அனுபமா!

ஐதராபாத் : நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு படம் 18 பேஜஸ்.

இந்த படத்தில் டோலிவுட்டின் இளம் நாயகன் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இன்றைய தினம் தனது பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்களை கவரும்வகையில் உள்ளது.

கொடி படத்தின் நாயகி

கொடி படத்தின் நாயகி

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தனுஷ்ஷூடன் இணைந்து கொடி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

நிகிலுடன் ஜோடி

நிகிலுடன் ஜோடி

தற்போது டோலிவுட்டில் நிகில் சித்தார்த்தாவுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள படம் 18 பேஜஸ். இந்த படத்தின் ஹீரோ நிகில் சித்தார்த்தா தனது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அனுபமாவும் வாழ்த்து தெவித்துள்ளார்.

சிறப்பான போஸ்டர்

சிறப்பான போஸ்டர்

இந்நிலையில் இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் மிகவும் சிறப்பான வகையில் உள்ளது. ஹீரோ தனது கண்களை துணியால் கட்டியிருக்க அதில் அனுபமா ஏதோ எழுதும்வகையில் இந்த போஸ்டர் காணப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிறந்தநாள் சர்ப்பிரைஸ்

பிறந்தநாள் சர்ப்பிரைஸ்

முன்னதாக வெளியிடப்பட்ட ப்ரீ போஸ்டரிலும் படக்குழு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர். தற்போது இந்த போஸ்டரும் கவரும்வகையில் உள்ளதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதனிடையே படக்குழு நிகிலுக்கு பிறந்தநாள் சர்ப்ரைசும் அளித்துள்ளது. அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X