TTF Vasan - 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு.. டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன்

சென்னை: TTF Vasan (டிடிஎஃப் வாசன்) பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உலகம் இப்போது யூட்யூபர்களால் சூழ்ந்திருக்கிறது. பலர் சேனல்களை ஆரம்பித்து வீடியோக்களை போடுவதை அன்றாட கடமையாக வைத்திருக்கின்றனர். அதன் மூலம் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

வாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்: இவரது யூட்யூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்க்ரைபர்களாக இருக்கின்றனர். 2k கிட்ஸ் மத்தியில் சினிமா பிரபலத்துக்கு இணையாக வலம் வருகிறார். இவரை காண கூட்டம் அவ்வளவு கூடுகிறது. கடந்த வருடம் முன்பு தனியார் ஹோட்டலில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு பலர் அங்கு கூடினர். அதை பார்த்தவர்கள் இவர் என்ன சினிமா பிரபலமா என்று கேள்விகளை கேட்டனர்.

The first look poster of YouTuber TTF Vasan starrer Manjal Veeran is out

சர்ச்சை: எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. இவர் மீது சில வழக்குகளும் போடப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துகிறார் என பலர் பேச, 90ஸ் கிட்ஸுக்கு வயதாகிவிட்டதால் அவர்களால் எங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள்தான் பழைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்கின்றனர் 2k கிட்ஸ்.

வாசன் வாசம்: அதேசமயம், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க வாசன் வாசமே அடித்தது.

வழக்குகள்: தொடர்ந்து ரைட் சென்றுகொண்டிருந்த அவர் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றதால் பல வழக்குகளை வாங்கியிருக்கிறார். மேலும் காவல் நிலையத்துக்கு வரும்போது கோட் சூட்டுடன் ஒரு பாடலுடன் வீடியோ போட்டதும் சர்ச்சையானது. அதேபோல் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது பாதியில் கிளம்பிப்போனது ட்ரோல் செய்யப்பட்டது.

திரைப்படம்: இந்தச் சூழலில் டிடிஎஃப் வாசன் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. செல்வம் என்பவர் இயக்கும் படத்துக்கு மஞ்சள் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X