பெரும் எதிர்பார்ப்புக்கிடையே.. இன்று மாலை ரிலீஸ் ஆகிறது க பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்!
சென்னை: க பெ ரணசிங்கம் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது.
பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கிராமத்து கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் படத்தின் டீசர் வெளியானது.
இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கை பார்த்த பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளனது.
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது. இதுதொடர்பாக டிவிட்டியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, எல்லா காதல் கதையும் அழகானது, அழகிய சிறுக்கி உங்கள் ஃபேவரைட்டாக இருக்கும். ரணசிங்கம் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 7.02 மணிக்கு ஜிப்ரான் இசையில் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











