விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
விடுதலை படத்தின் மூலம் முதன்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளார் இளையராஜா.

இரண்டு பாகங்களாக விடுதலை
அசுரனுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதை தான் இந்தப் படத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. கடந்த இரு வருடங்களாக நடைபெற்று வந்த விடுதலை படத்தின் ஷூட்டிங், கடந்தாண்டு இறுதியில் தான் முடிவுக்கு வந்தது. விஜய் சேதுபதியும் சூரியும் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒன்னோட நடந்தா - முதல் பாடல்
வழக்கமாக ஜிவி பிரகாஷுடன் கூட்டணி வைக்கும் வெற்றிமாறன், முதன்முறையாக விடுதலை படத்தில் இளையராஜாவுடன் பணிபுரிந்துள்ளார். வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி முதன்முறையக இணைந்துள்ளதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடல் வரும் 8ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளார் இளையராஜா அறிவித்துள்ளார். ஒன்னோட நடந்தா எனத் தொடங்கும் இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷை வம்பிழுத்த இளையராஜா
இந்நிலையில், இந்தப் பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட ப்ரோமோ வீடியோவையும் இளையராஜா தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில் தனுஷுக்கு எப்படி பாடுவது என சொல்லிக் கொடுக்கிறார் இளையராஜா. அப்போது இயக்குநர் வெற்றிமாறனும் அங்கே இருக்கிறார். இளையராஜா முன் பாட தனுஷ் தயக்கம் காட்ட, "உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல..." என கலாய்த்தபடி பாடலை பாடி காட்டுகிறார் ராஜா. இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மெலடியாக வரும் முதல் பாடல்
தனுஷ் பாடியுள்ள ஒன்னோட நடந்தா என்ற இந்தப் பாடல் மெலடியாக உருவாகியுள்ளது. வெற்றிமாறன் - இளையராஜா - தனுஷ் கூட்டணியில் முதன்முறையாக இந்தப் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். முக்கியமாக இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடியுள்ள முதல் பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











