twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்.. எந்த நடிகரின் படம்னு தெரியுமா?

    |

    சென்னை: இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் திரைப்படம் படமாக்குவது ட்ரெண்டாக இருந்து வருகிறது.

    அதிலும் சில இயக்குநர்கள் எந்த வெளிநாட்டில் இன்னும் படம் பிடிப்பு நடத்தப்படவில்லை என்று தேடி தேடி, ஏதாவது ஒரு பாடலையாவது படமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    நடிகர்கள் 1960களில் வெளிநாடுகளுக்கு செல்வது என்பதே மிக மிக அரிது, இப்படிப்பட்ட காலக்கட்டத்திலேயே இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் "சிவந்தமண்" என்ற திரைப்படம் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    நீங்க மட்டும் சங்கர் படம் பண்ணுவீங்க. ஆனா நா இத பண்ணணுமா? 2 இயக்குநர்கள் உரையாடல்... யார் தெரியுமா?நீங்க மட்டும் சங்கர் படம் பண்ணுவீங்க. ஆனா நா இத பண்ணணுமா? 2 இயக்குநர்கள் உரையாடல்... யார் தெரியுமா?

    எம்.ஜி.ஆரால் கைவிடப்பட்ட படத்தில் சிவாஜி

    எம்.ஜி.ஆரால் கைவிடப்பட்ட படத்தில் சிவாஜி

    'சிவந்தமண்'என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் தான் முதல் முதலில் 'அன்று சிந்திய ரத்தம்' என்ற தலைப்பில் கதாநாயகனாக சில நாட்கள் நடித்துக் கொண்டிருந்தார், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஸ்ரீதருக்கும் எம்ஜிஆர்ருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    1969ல் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்

    1969ல் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்

    ஒரு சில நாட்களுக்கு பிறகு இயக்குநர் ஸ்ரீதர், கதையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி "சிவந்த மண்" என்ற தலைப்பில் நடிகர் சிவாஜி கணேசன், நடிகை காஞ்சனா இவர்களை வைத்து கமர்சியல் திரைப்படமாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில பாடல்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இதுவே தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முதலில் வெளிநாட்டில் படம் ஆக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஆகும்.

    ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து நாடுகளில் படமாக்கப்பட்ட பாடல்கள்

    ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து நாடுகளில் படமாக்கப்பட்ட பாடல்கள்

    இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள " பார்வை யுவராணி கண் ஓவியம் " என்ற பாடல் பிரான்சில் உள்ள ' ஈபெல் கோபுரம்' பக்கத்தில் மற்றும் "ஒரு ராஜா ஒரு ராணியிடம்" என்ற பாடல் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் படமாக்கப்பட்டது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை பார்ப்பதற்காகவே கிராமப்புற மக்கள் எல்லாரும் ஆர்வத்தோடு இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

    ஆனந்தத்தில் கண்ணீர் சிவந்தது

    ஆனந்தத்தில் கண்ணீர் சிவந்தது

    இந்தத் திரைப்படத்தை பற்றி நடிகர் சிவாஜி கணேசன் பேசும்போது, இயக்குநர் ஸ்ரீதரை பெருமைப்படுத்தும் வகையில் ஆனந்தத்தில் கண்ணீர் சிவந்தது என்று படத்தின் வெற்றியை பற்றி பாராட்டி பேசி இருப்பார். இந்த பிரம்மாண்டமான கமர்சியல் படம் 100 நாட்கள் வரை ஓடின என்று பத்திரிகையாளர் சுறா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார்.

    English summary
    Filming abroad has become a trend these days. Moreover, some directors have a habit of shooting at least one film in any foreign country that has not yet been shot. It was very rare for actors to go abroad in the 1960s, and it was during such a period that the movie "Sivanthaman" directed by director Sridhar was shot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X