ஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம்! - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்

சென்னை : திருச்சியில் பொறியியல் படித்து விட்டு சினிமாவில் காமெடியனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டீவியின் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போராடி பங்கேற்றனர் கோபி மற்றும் சுதாகர். அதில் தோல்வி அடைய சலைத்து போகாத இருவரும் 'மூன்' தொலைக்காட்சியில் நகைச்சுவை ஷோக்களிலில் நடித்து வந்தனர்.

அதற்கு பிறகு மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தில் இவர்கள் திறமையைக்கண்டு, இருவருக்கும் வேலை கிடைத்தது. அதில் 'பரிதாபங்கள்' என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தங்களது முழுதிறமையை அந்த நிகழ்ச்சியில் காட்டி வந்தனர் கோபியும் சுதாகரும். பரிதாபங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இனையத்தை பயன்படுத்தும் உலக தமிழர்கள் அனைவரின் செல்போன் மற்றும் கணினியில் கோபி சுதாகர் பரிதாபங்கள் காமெடிகள் இனைந்தது. அப்போது விஜய் டீவியில் சரியான திறமை இல்லாதவர்கள் என்று வெளியேற்றப்பட்டதால் தான் தாங்கள் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்து இருக்கிறோம் என்று ஒரு கானொளியை வெளியிட்டு விஜய் டீவிக்கு பதிலடி கொடுத்தனர்.

The future is likely to go to Gopi Sudhakar

அப்போது ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளிவந்த 'மீசையமுருக்கு' படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் நடித்தனர். அந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில், அதுவும் ஒரு நிமிட காட்சியில் கோபி சுதாகர் நடித்து இருந்தனர், அவர்கள் வரும் அந்த காட்சிக்கு பெரிய அளவில் கைதட்டல்களும் விசில் சப்தங்களும் நிரம்பி இருந்தன. அது அவர்களே எதிர்பாராத ஒன்று .

The future is likely to go to Gopi Sudhakar
அதன் பிறகு கோபி சுதாகர் இணைந்து மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தனர். அதற்கு பிறகு சுதாகர் இயக்குனர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான உறியடி 2 படத்தில் ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The future is likely to go to Gopi Sudhakar
கோபி சுதாகர் இணைந்து கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியான 'சோம்பி' படத்தில் நடித்து இருந்தனர் .இவர்கள் மேலும் இணைந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் நடித்து வருகின்றனர்.
The future is likely to go to Gopi Sudhakar

Read more about: movie acting youtube
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X