The Girlfriend X Review: ராஷ்மிகா மந்தனாவின் ’தி கேர்ள் ஃபிரெண்ட்’ படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா? ஃப்ளாப்பா?
ஹைதராபாத்: பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'தி கேர்ள் ஃபிரெண்ட்' திரைப்படத்துக்கு எக்ஸ் தள வாசிகள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவுக்கு வெற்றி மற்றும் தோல்விப் படங்கள் மாறி மாறி வெளியான நிலையில், 'தி கேர்ள்ஃபிரெண்ட்' படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், படம் பார்க்க அருமையாக உள்ளது என்றும் சரியான நேரத்தில் இப்படியொரு படம் வந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சாவா, சிக்கந்தர், தாமா மற்றும் தி கேர்ள் ஃபிரெண்ட் என இதுவரை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 4 படங்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ளன. தி கேர்ள் ஃபிரெண்ட் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஹைப் மீட்டர் 90 சதவீதம்: சமந்தாவுக்கு ஜோடியாக மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவீந்திரன் பல படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்த நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படம் வெளியான நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் எக்ஸலண்ட் என்றும் ஹைப் மீட்டர் 90 சதவீதம் உள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு டாப் நாட்ச் என கொண்டாடி வருகின்றனர்.
சிறந்த தெலுங்கு படம்: இந்த ஆண்டு தொடர்ந்து 3 இந்தி படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக ஒரு தெலுங்கு படம் வெளியான நிலையில், இந்த ஆண்டின் சிறந்த தெலுங்கு படம் என்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக உள்ளதாக இந்த நெட்டிசன் பாராட்டியுள்ளார்.
இந்த ஒரு சீன் போதும்: ராஷ்மிகா மந்தனா லாட்டரி நடிகை இல்லை என்பதற்கு ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த ஒரு சீன் போதும் ராஷ்மிகாவின் ரியல் நடிப்பை ரசிகர்கள் தியேட்டர்களில் பார்த்து மிரண்டு போய் விடுவார்கள். பக்காவான தியேட்டர் மெட்டீரியல் படம் கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க என டோலிவுட் ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











