The Goat Life: ஆடு ஜீவிதம் படம் டப்பிங் வேலைகள் நிறைவு.. 4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்!
சென்னை: மலையாளத்தில் புகழ் பெற்ற ஆடு ஜீவிதம் என்ற நாவலை கதைக்களமாகக் கொண்டு அதே பெயரில் உருவாகியுள்ள படம் ஆடு ஜீவிதம். இந்த படத்தின் நாயகனாக பிரிதிவிராஜ் நடித்துள்ள நிலையில் அவரது ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மலையாளத்தின் புகழ்பெற்ற இயக்குனர் பிளெஸ்சி தாமஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு தற்போது இந்த படத்தை சாத்தியப்படுத்தியுள்ளார். படம் வரும் மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ளது.
வயிற்றுப் பிழைப்பிற்காக அரபு நாட்டுக்கு செல்லும் இருவர், அரேபியர்களிடம் சிக்கி ஆட்டுப்பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலின் கதையும் இதுதான். கடந்த 2010ம் ஆண்டில் கேரள சாகித்ய அகாடமி விருதினை இந்த நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி இசை அமைத்துள்ளனர். மீண்டும் மலையாள படத்திற்கு இசையமைத்தது மிகுந்த பெருமையாக இருப்பதாக இசை வெளியீட்டில் பேசிய ஏ ஆர் ரகுமான் கூறியிருந்தார்.

ஆடு ஜீவிதம் படம்: நடிகர் பிரித்விராஜ். அமலாபால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஆடு ஜீவிதம். கேரளாவில் பென் யாமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த படத்திற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் என இந்த படம் மிக நீண்ட காலங்கள் தயாரிப்பில் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து வரும் மார்ச் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி இசையமைத்துள்ளனர்.
4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்கள் லைவ் ஆக பதிவு செய்யப்பட்டன. இதனிடையே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளுக்கும் படத்தின் நாயகன் பிரிதிவிராஜ் அடுத்தடுத்து டப்பிங் பேசி முடித்துள்ளார். படத்தில் அரபு நாட்டில் பிறப்பு தேடி சென்று ஒட்டகம் மேய்க்கும் நபராக நடித்துள்ளார் பிருத்விராஜ்.
அசத்தலான ட்ரெயிலர்: இதனிடையே, இந்த படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில தினங்களாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடும் நடத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் மலையாள படத்திற்கு மீண்டும் இசையமைத்தது சொந்த வீட்டிற்கு வந்த உணர்வை அளிப்பதாகவும் மேலும் ஆடு ஜீவிதம் போன்ற சிறப்பான படத்திற்கு இசையமைத்தது மிகவும் பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஏஆர் ரஹ்மான் மகிழ்ச்சி: மேலும் பிளெஸ்சி போன்ற ஆர்வம் மிகுந்த இயக்குனருடன் வேலை செய்தது மிகவும் மரியாதைக்குரியது என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அவரிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏஆர் ரகுமான் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். பிளெஸ்சி மிகவும் பொறுமையான மனிதர் என்றும் இந்த படம் பலரின் கதையை பற்றியது என்றும் நாமும் ஏதோ ஒரு வகையில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். சில மனிதர்களுக்கு மனச்சிக்கல் இருக்கும் அதுபோல இந்த படத்தில் ஒருவர் பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார், இருந்தும் இந்த கதையை பல மனிதர்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் ஏஆர் ரகுமான் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











