GOAT: கோட் இன்னும் 6 நாளில் ரிலீஸ்.. அஜித் குறித்து வெங்கட் பிரபு ட்வீட்.. கடுப்பில் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் கங்கை அமரனின் மகன் என்றோ இசைஞானி இளையராஜாவின் தம்பி மகன் என்றோ, அடையாளத்தில் நிற்காமல், இயக்குநராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தான் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பல வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு படங்களை இயக்குபவர் என்றால் அது வெங்கட் பிரபுதான். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
தமிழ் சினிமாவில் இன்றைக்கு உச்சநட்சத்திரங்களாக உள்ள விஜய் மற்றும் அஜித்தை இயக்கிய வெகு சில இயக்குநர்களில் இயக்குநர் வெங்கட் பிரபும் ஒருவர். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து அவரது 50வது படமான மங்காத்தா படத்தினை இயக்கினார். இந்தப் படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக மாறியது. மேலும், மங்காத்தா படத்திற்குப் பின்னர் அஜித் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் அஜித் இன்னும் ஒரு மாஸான ஹீரோவாகவும் மாஸான வில்லனாகவும் உயர்ந்து நிற்கும் படம் என்றால் அது மங்காத்தா படம்தான்.

நடிகர் விஜய் கடந்த மாதம் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனால் அவரது 50வது வயதில் வெளியாகும் படம் தி கோட் என்பதால், இயக்குநர் வெங்கட் பிரபு தல 50யும் நான் தான், தளபதி 50யும் நான் தான் எனக் கூறினார். வெங்கட் பிரபுவின் இந்த பேச்சு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

அஜித்: மேலும் தி கோட் படம் மங்காத்தா படத்தை விட 100 மடங்கு நன்றாக இருக்க வேண்டும் என அஜித் தன்னிடம் கூறினார் என வெங்கட் பிரபு தெரிவித்தார். மேலும் கோட் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், அஜித் தி கோட் படத்தின் ட்ரைலரைப் பார்த்தாரா? பார்த்த பின்னர் என்ன கூறினார் எனக் கேட்கப்பட்டது. அதற்கி பதில் அளித்த வெங்கட் பிரபு, "அஜித் சார் ட்ரைலர் பார்த்துட்டாரு. ட்ரைலர் பார்த்த பின்னர் எனக்கு மெசேஜ் பண்ணாரு. அதில், ட்ரைலர் நல்லா இருக்குடா, விஜய்க்கும் டீமுக்கும் வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லீடு" என குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

வி.பி. போஸ்ட்: படத்தின் வெளியீட்டுப் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் வெங்கட் பிரபுவின் தந்தையும் இயக்குநருமான கங்கை அமரன் மற்றும் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளனர். அந்தப் பதிவில், மூன்று இதயக் குறியீடுகளையும் அதனுடன், இது நடந்துள்ளது என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். பட ரிலீஸ்க்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வெங்கட் பிரபு அஜித்துடன் அவரது தந்தை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் கோபம்: ஏற்கனவே மலேசியாவில் தி கோட் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் டீ சர்ட்டை வெங்கட் பிரபு வெளியிட்டார். விஜய் படத்துக்கான புரோமோசன் செய்ய வேண்டிய காலகட்டத்தில் அஜித்துக்கும் அவரது படத்திற்கும் வெங்கட் பிரபு புரோமோசன் செய்து வருகின்றார் எனவும் விஜய் ரசிகர்களில் ஒரு சிலர் கோபித்துக் கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications











