கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்.. விஜய் 22வது இடம்.. தனுஷ்,சூர்யா எத்தனையாவது இடம்னு தெரியுமா?
சென்னை : செல்போன் எப்படி நமது வாழ்க்கையில் அவசியமாகிவிட்டதோ, அதேபோல கூகுளும் நம்வாழ்க்கையில் இரண்டறக்கலந்து விட்டது எனலாம். என்ன சந்தேகம் என்றாலும் , கூகுளில் ஒரே ஒரு தட்டுதட்டினால் போது அனைத்து தகவலும் நொடியில் வந்துவிழும்.

பொண்டாட்டி,புள்ளை இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் போல, ஆனால் கூகுள் க்ரோமோ இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அடி முட்டாளையும் கூகுள் அதி புத்திசாலியாக மாற்றிவிட்டதால், கூகுளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
தற்போது கூகுள் நிறுவனம் 2022ம் அரையாண்டின் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
100 பேர் பட்டியல்
நடிகர் விஜய் 22வது இடத்திலும், தனுஷ், சூர்யா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பெண் நடிகர்களில், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். தென்னிந்திய நடிகர்களில் அதிகம் தேடப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.
5. லதா மங்கேஷ்கர்
7. கத்ரீனா கைஃப்
8. ஆலியா பட்
9. பிரியங்கா சோப்ரா
11. சல்மான் கான்
12. ஷாருக்கான்
15. காஜல் அகர்வால்
16. கரீனா கபூர் கான்
18. சமந்தா ரூத் பிரபு
19. அல்லு அர்ஜுன்
20. ராஷ்மிகா மந்தனா
22. விஜய்
25. அக்ஷய் குமார்
26. ஐஸ்வர்யா ராய்
28. தீபிகா படுகோன்
31. ரன்பீர் கபூர்
33. நயன்தாரா
36. அமிதாப் பச்சன்
37. தமன்னா
38. கஜோல்
40. யாஷ்
41. ஹிருத்திக் ரோஷன்
42. அமீர் கான்
44. பூஜா ஹெக்டே
47. மகேஷ் பாபு
53. ராம் சரண்
56. அனுஷ்கா ஷெட்டி
58. ஜூனியர் என்டிஆர்
61. தனுஷ்
62. கீர்த்தி சுரேஷ்
63. சூரியா
64. கியாரா அத்வானி
68. பிரபாஸ்
71. கங்கனா ரணாவத்
75. ஸ்ரீதேவி
77. ரஜினிகாந்த்
98. அனன்யா பாண்டே
வாரிசு திரைப்படம்
நடிகர் விஜய் தற்போது வம்ஷி பைடப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில், ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், ஷாம்,ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் கசிந்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படப்பிடிப்புக்காக செட் போடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











