The Gray Man படப்பிடிப்பில் தனுஷ் .. இணையத்தில் வைரலாகவும் புகைப்படங்கள்
சென்னை: தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
கர்ணன் ரிலீசுக்கு முன்னரே தனுஷ் The Gray Man படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு சென்றடைந்தார்.

இரண்டாம் முறையாக
'தி க்ரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு ரூஸோ சகோதரர்கள் இயக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனுஷுக்கு இரண்டாவது ஹாலிவுட் படமாகும். 'தி க்ரே மேன்' திரைப்படம் Netflix ல் வெளியாகும் என முன்னரே அறிவிப்பு வெளியானது.

2 மாதங்கள்
கடந்த மாதம் கர்ணன் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை முடித்த தனஷ் அதனை முடித்த கையோடு அமெரிக்காவிற்கு சென்றடைந்தார். 2 மாதம் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பணியாற்றிவிட்டு பின்னர் வருகின்ற மே மாதம் தமிழ் நாட்டுக்கு திரும்ப உள்ளார் என தெரிகிறது.

பிஸியாக தனுஷ்
தனுஷ் தமிழகம் திரும்பிய உடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து தனுஷிக்கு பல படங்கள் வரிசையில் உள்ளதால் மிகவும் பிஸியாக உள்ளார். தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் தனுஷின் அடுத்த கட்ட பணிகள் கேள்வி குறி ஆகியுள்ளன.
Recommended Video

கலிஃபோர்னியாவில் தனுஷ்
இந்நிலையில் தனுஷ் The Gray Man படப்பிடிப்பின் போது கலிஃபோர்னியாவில் எடுத்த கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #TheGrayMan எனும் ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











