The Gray Man Trailer: ஒரு ஷாட்னாலும் தனுஷ் தரமான செய்கை.. வெளியானது தி கிரே மேன் டிரைலர்!

சென்னை: ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், தனுஷ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்களின் மற்றுமொரு தரமான படைப்பு என டிரைலரிலேயே அறிவிப்பை போட்டு விடுகின்றனர்.

நடிகர் தனுஷ் சண்டை போட வா என அழைக்கும் அந்த ஒரு காட்சி மட்டுமே டிரைலரில் இடம்பெற்றிருந்தாலும் மிரட்டலாக உள்ளது.

லீத்தல் வெப்பன்

லீத்தல் வெப்பன்

தி கிரே மேன் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தனது போஸ்டருடன் நடிகர் தனுஷ் வெளியிட்டு இருந்தார். கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், பிளேட் ரன்னர் ஹீரோ ரியான் கோஸ்லிங், ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை அனா டி அர்மாஸ், தனுஷ் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நேம் கார்டு போட்டுள்ளனர். அதில் தனுஷ் பெயர் இடம்பெற்றிருப்பது இந்திய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. லீத்தல் வெப்பன் என அவருக்கு தனியாக ஒரு கேரக்டர் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

தி கிரே மேன் டிரைலர்

தி கிரே மேன் டிரைலர்

25 ஆயிரம் கோடி வசூலை குவித்து அவதார் படத்தின் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை கொடுத்த ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக போகிறது. இந்நிலையில், தற்போது அதன் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் மற்றும் கிறிஸ் எவான்ஸின் யூடியூப் பக்கத்திலும் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

கிறிஸ் எவான்ஸ் vs ரியான் கோஸ்லிங்

கிறிஸ் எவான்ஸ் vs ரியான் கோஸ்லிங்

டிரைலரை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது கிறிஸ் எவான்ஸ் மற்றும் ரியான் கோஸ்லிங் இடையே தான் மிகப்பெரிய ஃபேஸ் ஆஃப் நடைபெற போகிறது என்பதை ஏகப்பட்ட காட்சிகள் உணர்த்துகிறது. என்னால் அனைவரையும் கொல்ல முடியும் என கிறிஸ் எவான்ஸ் சொல்ல, அதற்கு மற்றொரு ஹாலிவுட் நடிகர் எல்லாரையும் முடியாது என ரியான் கோஸ்லிங்கிற்கு லீடு கொடுக்கிறார்.

ஜூலை 22

சூப்பர் ஹீரோக்கள் படங்களை இயக்கி போர் அடித்துப் போன நிலையில் சர்வதேச ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நெட்பிளிக்ஸிற்காக இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர். இந்த படம் நேரடியாக வரும் ஜூலை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X