தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை : மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.

இந்தப் படம் பல விருதுகளையும் குவித்து பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ளது. மேலும் வீட்டு சூழலில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பாக அமைந்திருந்தது.

சிறந்த வரவேற்பு

சிறந்த வரவேற்பு

ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். புதிதாக திருமணமான ஒரு பெண் பழமையான கொள்கைகளையும் ஆணாதிக்கத்தையும் கொண்டுள்ள தனது புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசியது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் முடிவையும் இந்தப் படம் எடுத்துக் காட்டியது. கடந்த ஜனவரி 15ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

மிகுந்த போட்டிகளுக்கிடையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கண்ணன் கைப்பற்றியுள்ளார். படத்தின் லீட் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிறை கம்பிகளுக்கு இடையில் கம்பிகளை துடைக்கும்படியாக இந்த போஸ்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் காணப்படுகிறார். கிச்சனில் இருந்து அவர் இதனை செய்கிறார்.

விரைவில் ட்ரெயிலர்

விரைவில் ட்ரெயிலர்

இந்த போஸ்டரில் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தை இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கிவரும் நிலையில், துர்காராம் சவுத்ரி மற்றும் நீல் சவுத்ரி படத்தை தயாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X