ஒரிஜினலை அப்படியே காப்பியடித்த மலையாள ரீமேக் படத்தின் 2வது லுக் போஸ்டர்

சென்னை : மலையாளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.

இந்தப் படம் தமிழில் ரீமேக்காகி வருவது தெரிந்த விஷயம்தான்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி விமர்சனரீதியாக வெற்றி பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். சர்வதேச அளவில் விருதுகளையும் இந்தப் படம் குவித்து வருகிறது. ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திருமணத்தின் பெயரால் பெண்கள் சுமக்கும் குடும்ப பாரம் குறித்து பேசியிருந்தது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் ரீமேக்காகி வருகிறது. தமிழில் நீண்ட போட்டிகளுக்கிடையில் இந்தப் படத்தின் உரிமையை இயக்குநர் ஆர் கண்ணன் பெற்றிருந்தார். இந்நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு

படத்தின் லீட் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ராகுல் ரவீந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

வரவேற்பை பெற்ற முதல் பார்வை

வரவேற்பை பெற்ற முதல் பார்வை

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கம்பிகளுக்கு பின்னால் அழுக்கடைந்த கிச்சனுக்குள் சுத்தம் செய்வது போல போஸ்டர் அமைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கிடையிலான அன்னியோன்யம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரிஜினலை காப்பியடித்த 2வது லுக்

ஒரிஜினலை காப்பியடித்த 2வது லுக்

இந்தப் போஸ்டர் ஒரிஜினல் படத்தின் போஸ்டரை போலவே அமைந்துள்ளது. ரீமேக் படமாக இருந்தாலும் அதில் ஒரு தனித்துவம் காணப்பட வேண்டும். கதையை சிதைக்காமல் அப்படியே கொடுப்பது சிறப்பானதுதான் என்றாலும் போஸ்டரையும் அப்படியே காப்பியடிக்க வேண்டுமா என்று தற்போது விமர்சகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.

டைட்டில் ஃபாண்ட் கூட மாறவில்லை

டைட்டில் ஃபாண்ட் கூட மாறவில்லை

மேலும் டைட்டில் எழுத்துக்களும் போஸ்டரில் ஒரே மாதிரி இருப்பதாகவும் கூறியுள்ளனர். தன்னுடைய இயக்கத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் ஆர் கண்ணன், சமீபத்தில் தள்ளிப் போகாதே என்ற படத்தை கொடுத்துள்ளார். கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

இந்நிலையில் தற்போது மலையாளத்தின் சிறப்பான படத்தை இயக்கிவரும் அவர், இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. படத்தின் முந்தைய போஸ்டர் சிறப்பாக அமைந்த நிலையில் படம் தழுவலாக இல்லாமல் ஒரிஜினாலிட்டியுடன் வெளியாக வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X