The GOAT சீன படத்தின் காப்பியா? விஜய் எந்த போஸ்டர் விட்டாலும் அதற்கு பல கதை சொல்றாங்களே!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கோட் (The Greatest of All Time) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நியூ இயரை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அந்த போஸ்டரை பார்த்து சில பல படங்களின் தழுவல் என்றும் டி.பி. கூப்பரின் கதை என்றும் ஏகப்பட்ட கணிப்புகள் வெளியாகின. இந்நிலையில், 2வது போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியான நிலையில், அது சீன படத்தின் காப்பி என புதிய உருட்டுகள் ஆரம்பித்துள்ளன.

ஹாலிவுட் படங்களை காப்பி அடித்தால் தான் அடுத்த நொடியே காப்பி அடித்து விடுவார்கள் என இயக்குநர்கள் ரசிகர்களை தவறாக புரிந்து கொள்கின்றனரா என தெரியவில்லை. இந்த காலத்து நெட்டிசன்கள் ஓடிடி வந்த நிலையில், ஜப்பான், ஸ்பானிஷ், சீனா என எந்த மொழி படங்கள் ஆனாலும் பார்த்து வருகின்றனர். புதிதாக ஒரு போஸ்டரை கோபி பிரசன்னா எப்படி எங்கே இருந்து இன்ஸ்பயர் ஆகி செதுக்கினாலும், அடுத்த நொடியே தம்பி இது இந்த படம் தானே என போட்டுத் தாக்கி வருகின்றனர்.

The Greatest of All Time second look copied by Chinese movie?

டீஏஜிங் டெக்னாலஜி: தமிழ் சினிமாவில் எந்த தொழில்நுட்பம் இல்லாத காலக்கட்டத்திலேயே நவராத்திரி, திரிசூலம், தெய்வமகன் என அப்பவே ஏகப்பட்ட மேஜிக்குகளை செய்து அசத்தி விட்டனர். மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் படங்களில் கமல்ஹாசன் வெளிநாட்டில் பயன்படுத்தப் பட்ட டெக்னாலஜிக்களை நம்ம ஊருக்கு கொண்டு வந்து பல வேடங்களில் திரையில் தோன்றி வியக்க வைத்திருந்தார். அந்த வரிசையில் தற்போது வயதான நடிகர்களை இளமையான தோற்றத்தில் காட்டும் டீஏஜிங் டெக்னாலஜியில் பல ஹாலிவுட் படங்கள் வெளியாகி வரும் நிலையில், வெங்கட் பிரபு அப்படியொரு தொழில்நுட்பத்துடன் தமிழில் விஜய்யை வைத்து ஒரு படத்தைக் கொடுக்கப் போகிறார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: தளபதி 68 படத்தின் காஸ்டிங்கை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய்யை வைத்து ஜாலியாக ஒரு படத்தை வெங்கட் பிரபு கொடுக்கப் போகிறார் என்றும் வாரிசு படம் போல கலர்ஃபுல்லாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானதும் ரசிகர்களின் ஹைப் ஸ்கைஹை லெவலுக்கு சென்று விட்டது. ஹாலிவுட் தரத்தில் ஒரு சம்பவம் கன்ஃபார்ம் என விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

The Greatest of All Time second look copied by Chinese movie?

எந்த வெளிநாட்டு படம் பாஸ்: வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன், FBIஐ கண்ணில் விரல் விட்டு ஆட்டிய டி.பி. கூப்பர் என ஏகப்பட்ட படங்கள் பற்றிய பட்டியலை ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், செகண்ட் லுக் நேற்று வெளியான நிலையில், சில சீன படங்களில் ஹீரோ அவரது யங் வெர்ஷன் உடன் ஒரே பைக்கில் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போ இந்த முறை சீனா படத்தில் இருந்து வெங்கட் பிரபு இன்ஸ்பயர் ஆகி விட்டாரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால், கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படத்தை வெங்கட் பிரபு கொடுக்கப் போவது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X