கெஸ்ட் ஹவுசுக்கு வா.. நிர்வாணமாக்கி விடிய விடிய டார்ச்சர்.. கேரளாவை அலறவிட்ட ஹேமா கமிஷன் அறிக்கை!

சென்னை: மலையாள சினிமா இந்த ஆண்டு கொண்டாடும் வகையில் பல வெற்றிப்படங்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டன. தமிழகத்தில் மஞ்சுமல்பாய்ஸ், பிரேமலு, ஆவேசம் போன்ற படத்தை மொழி தெரியவில்லை என்றாலும் வசூலை அள்ளியது. இப்படி மலையாள பலரும் பாராட்டி வந்த நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அனைவரையும் முகம்சுளிக்க வைத்தது. இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை ஆணையம் தலையிட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வெளியானது.

year ender 2024 hema commission mohanlal

ஹேமா கமிஷன் அறிக்கை: 233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழவகுக்கிறது என்றும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், அதற்கு ஈடாக பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இது ஆபத்தான ஒரு விஷயமாக மாறி வருகிறது என்றும். பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்கப்படுவதாகவும். மலையாள சினிமாவில் இது சகஜமாக நடந்து வருகிறது. மேலும், சினிமா கனவோடு வரும் பெண் நடிகர்களை கட்டாயப்படுத்துவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என்றும், அவர்களை சமசரம் செய்து கொண்டு சிலர் படவாய்ப்பை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது

year ender 2024 hema commission mohanlal

கெஸ்ட் ஹவுசுக்கு வா: அந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார். அதேபோல, பிரபல குணசித்திர நடிகர் திலகனின் மகள், என் தந்தை இறந்த போது ஒரு பெரிய நடிகர் என்னிடம் போனில் பேசினார். கெஸ்ட் ஹவுசுக்கு வா நான் உன்னை பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று கூறியதாக அதிரடியாக குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

அத்து மீறினார்: இதைத்தொடர்ந்து, கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். அதில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அன்று இரவே கொல்கத்தா திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கேரளா திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நிர்வாணமாக்கினார்: இந்த புகார் மட்டுமில்லாமல், கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீது வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். அதில், அவர், மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றார். அதேபோல, கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 2012ம் ஆண்டு மம்முட்டி நடித்த 'பவுட்டியுடே நாமத்தில்’ படத்தின் படப்பிடிப்பின் போது, நான் இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்து, அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன். அப்போது, இயக்குனர் ரஞ்சித், பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்து, எனக்கு மது கொடுத்து, என் ஆடைகளை களையவைத்து என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கேரளா திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

வருத்தப்பட்ட மோகன்லால்: இப்படி தொடர்ந்து நடிகைகளிடம் இருந்து வந்த புகாரால், மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் குண்டோடு ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன்லால், நான் எங்கும் ஓடிப்போகவில்லை. எனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் கேரளாவில் இல்லை. உங்கள் அனைவருக்கும் என்னை பல ஆண்டுகளாக தெரியும். ஆனாலும், ஒரே நாளில் நான் அந்நியமாக மாறிவிட்டேனா என் வருத்தப்பட்டு பேசிஇருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X