Trisha: மதில் சுவர் பிரச்சனை.. சமாதானமான த்ரிஷா.. வழக்கு முடிந்தது!
சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான த்ரிஷாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இதையடுத்து, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். எல்லா வயதினரையும் ஈர்க்கும் இவரின் மென்மையாக அழகினால் 40 வயதை கடந்த நிலையில் பல ரசிகர்களுக்கு இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கும் த்ரிஷா, கோட் படத்தில் வரும் மட்ட பாடலுக்கு ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 20 ஆண்டுக்கும் மேலாக த்ரிஷா தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.

மதில் சுவர் பிரச்சனை: நடிகை த்ரிஷா சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் வீடு உள்ளது. இந்த வீடு ஏற்கனவே கட்டப்பட்ட வீடு. இந்த வீட்டை 2018ம் ஆண்டு த்ரிஷா வாங்கினார். இந்த வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டை 2023ம் ஆண்டு மெய்யப்பன் என்பவர் வாங்கினார். அவர் அந்த வீட்டை இடித்துவிட்டு புதியதாக கட்டுமானப்பணியை மேற்கொண்டார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: அப்போது இந்த இரண்டு வீட்டிற்கும் இருக்கும் பொதுவாக இருந்த, மதில் சுவர் இடிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மதில் சுவரை இடிக்க நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார் நடிகை த்ரிஷா. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சமரசமானது: இதையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை திரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும், பிரச்னையை இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியிலேயே சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சமரசம் குறித்த அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











