ராஷ்மிகாவின் பாலிவுட் என்ட்ரி... நைட் பார்ட்டியில் ஆட்டம் பாட்டம்... ட்ரெண்டாகும் சிஸ்லிங் வீடியோ!

மும்பை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'குட்பை' திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், 'குட்பை' படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'பார்ட்டி சாங்' செம்ம மாஸாக வெளியாகியுள்ளது.

கீதா கோவிந்தம் கொடுத்த கம்பேக்

கீதா கோவிந்தம் கொடுத்த கம்பேக்

கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட் என வரிசைக் கட்டிய ராஷ்மிகா மந்தனாவுக்கு, கடந்தாண்டு வெளியான 'புஷ்பா' வேற லெவலில் மார்க்கெட்டை உயர்த்தியது.

விஜய்யுடன் வாரிசு, அமிதாப்புடன் குட்பை

விஜய்யுடன் வாரிசு, அமிதாப்புடன் குட்பை

தெலுங்கில் அசத்திய ராஷ்மிகா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 'சுல்தான்', 'புஷ்பா' என மாஸ் காட்டிய ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் 'வரிசு' படத்தில் நடிக்க ஜாக்பாட் கிடைத்தது. இந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் டூயட் பாடி வருகிறார். அப்படியே பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. இதன்மூலம் இந்தியிலும் தனது கணக்கைத் தொடங்கியுள்ளார்.

முதல் படத்திலேயே தரமான கேரக்டர்

முதல் படத்திலேயே தரமான கேரக்டர்

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அறிமுகமாகும் 'குட்பை' திரைப்படத்தை, விகாஸ் பால் இயக்கியுள்ளார். ராஷ்மிகா, அமிதாப் பச்சன் லீடிங் கேரக்டரில் நடிக்க, நீனா குப்தா, சுனில் குரோவர், பாவில் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். காமெடி ப்ளஸ் எமோஷனல் ஜானரில் ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம், அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நைட் பார்ட்டியில் ஆட்டம் பாட்டம்

நைட் பார்ட்டியில் ஆட்டம் பாட்டம்

ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், 'குட்பை' படத்தில் இருந்து 'The Hic Song' வெளியாகி செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது. அமித் திரிவேதி இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், ராஷ்மிகா மந்தனா நைட் பார்ட்டியில் என்ஜாய் பண்ணுவதாக படமாக்கப்பட்டுள்ளது. ரகளையான இசை, அல்டிமேட் டான்ஸ் என அமர்க்களமாக வெளியான இந்தப் பாடல் குறித்து ரஷ்மிகாவும் ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்தப் பாடலை கேட்க ஆரம்பித்ததில் இருந்து இன்னும் நிறுத்தவே இல்லை. உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X