twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விவேக் மரணத்திற்கு காரணம் கொரோனா தடுப்பூசியா? விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்!

    |

    சென்ன: கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக அளிக்கப்பட்ட புகாரை மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக். இயக்குநர் கே பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் விவேக்.

    நூற்றுக் கணக்கான படங்களில் நடித்துள்ளார் விவேக். பிலிம் ஃபேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் விவேக்.

    திடீர் மாரடைப்பு

    திடீர் மாரடைப்பு

    சினிமாவில் விவேக்கின் சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

    Recommended Video

    Vivek சார் கூட இருந்த அந்த Golden Days | Actor Shiva Exclusive | #closecal l Filmibeat Tamil
    ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள்

    ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள்

    இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். சுயநினைவு இன்றி அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    நடிகர் விவேக் மரணம்

    நடிகர் விவேக் மரணம்

    ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 59 வயதே ஆன நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அதிர்ச்சியை ஏற்படுத்திய விவேக் மரணம்

    அதிர்ச்சியை ஏற்படுத்திய விவேக் மரணம்

    தனது நகைச்சுவை மூலம் சமுதாயத்திற்கான சீர்திருத்த கருத்துக்களை கூறி வந்த விவேக், சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்து வந்தார். அவரது அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தவைர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி

    நடிகர் விவேக் இறப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக், தனக்கு ஊசி போட்ட செவிலியர் உட்பட அனைவரையும் பாராட்டி பேசினார்.

    கொரோனா தடுப்பூசி போட்டதால் மரணம்

    கொரோனா தடுப்பூசி போட்டதால் மரணம்

    ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே விவேக் மரணமடைந்து விட்டார். கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் மன்சூர் அலிகானும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    மனித உரிமை ஆணையம் ஏற்பு

    மனித உரிமை ஆணையம் ஏற்பு

    இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான சரவணனின் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

    English summary
    The Human Rights Commission has accepted the complaint that actor Vivek died due to the corona vaccine. Actor Vivek died on April 17 th due to cardiac arrest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X