மன்னிப்பு கேட்க வேண்டும்.. இசையமைப்பாளர் மீது பிரபல நடிகை போலீஸில் புகார்!
சென்னை : பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது பிரபல நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தமிழில் சச்சின், வில்லு, கந்தசாமி, சிங்கம், வீரம், தி வாரியர் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். ரசிகர்களால் டிஎஸ்பி என அன்புடன் அழைக்கப்படும் இவர் அவ்வப்போது தனி ஆல்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைபோடு போட்ட புஷ்பா திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், திரைப்பட பாடலுக்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் ஆல்பங்கள் மற்றும் தனி பாடலுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த மாதம் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, அவரே பாடி ஆடிய 'ஓ பாரி' என்ற பெயரில் ஆல்பம் ஒன்று வெளியானது. இந்த பாடலை ரகீப் ஆலம் எழுதியிருந்தார். அந்த ஆல்பத்தை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட நிலையில், யூடியூபில் இந்த பாடல் தாறுமாறாக ஹிட்டடித்து வருகிறது.

புகார் மனு
இந்நிலையில், அந்த ஆல்பம் பாடலில் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற வரி இடம் பெற்றுள்ளது. இந்த வரி இந்து மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் நகரில் உள்ள சைராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புண்படுத்திவிட்டார்
நடிகை கராத்தே கல்யாணி அளித்து புகார் மனுவில், பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்,'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' எனும் இந்து ஸ்லோகனை பாடலில் பயன்படுத்தியுள்ளார். இதனால், தானும், தான் சார்ந்த இந்து சமூகத்தின் மனதை புண்படுத்திவிட்டார் என்று புகார் கூறியுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்குப்பதிவு
முதற்கட்டமாக நடிகை கராத்தே கல்யாணியை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். இதையடுத்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடமும் விசாரணை நடத்த ஹைதராபாத் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் மீது ஐபிசி 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











