twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி பேசிய ’ராட்சசி’- 3 ஆம் ஆண்டு..ஜோதிகாவின் பேர் சொன்ன படம்

    |

    சென்னை: நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி கல்வி முக்கியத்துவம் குறித்து பெண்களின் உரிமை குறித்தும் பேசிய படம் வந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
    கல்வி உதவிகளை செய்து வரும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் அக்கருத்தால் ஈர்க்கப்பட்டவர். அவர் நடித்த ராட்சஸி படம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி வெளியானது.
    அதில் கல்வியின் முக்கியத்துவம், அரசுப்பள்ளியை பாதுகாப்பது குறித்து பெரிதாக பேசப்பட்டிருக்கும்.

     யானைப் படத்தில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டாலும் ஓய்வு தரவில்லை..ஹரி சொன்ன திடுக் தகவல் யானைப் படத்தில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டாலும் ஓய்வு தரவில்லை..ஹரி சொன்ன திடுக் தகவல்

    பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் சிறந்த படம் ராட்சசி

    பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் சிறந்த படம் ராட்சசி

    தமிழில் பெண்ணை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. இதில் சில படங்கள் பெண்களின் பெருமை பேசும், சில படங்கள் அடிமைகளாக கணவன் என்ன செய்தாலும் சகித்துக் கொள்வதே சிறப்பான பெண் என போதித்தன, புதுமைப்பெண்கள் பற்றி சில படங்கள் பேசியது. சில படங்கள் காவலதிகாரிகளாக பெண்கள் செயல்படுவதைப் பற்றி பேசின. ஆனால் முற்றிலும் வித்தியாசமாக கல்விக்காக, அரசுப்பள்ளியை சீரமைக்க ஒரு பெண் போராடுவதும் அதற்காக சந்திக்கும் இன்னல்களை தனது தைரியம், புத்திக்கூர்மையால் சமாளிப்பதாக எடுக்கப்பட்ட படம் ராட்சஸி.

    சுவாரஸ்யமாக கதையை நகர்த்திய இயக்குநர்

    சுவாரஸ்யமாக கதையை நகர்த்திய இயக்குநர்

    ராணுவத்தில் துணை ஆணையர் அந்தஸ்த்தில் உயர் அதிகாரியாக இருக்கும் நாயகி அதை துறந்து ஒரு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வராக நேரடி நியமனம் மூலம் வரும்போதே படத்தில் சுவாரஸ்யம் கூடிவிடுகிறது. பள்ளியில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்களை அடக்குவதுதான் பெரும்பணி என எண்ணத்தோன்றும்போது இல்லை அதைவிட சிக்கல்கள் படத்தில் நாயகி எதிர்கொள்வார் என அடுத்தடுத்த நகர்தலில் சுவாரஸ்யமாக நகர்த்தினார் கதை எழுதி இயக்கிய செய்யது கவுதம்ராஜ்.

    நடை, உடை, பாவத்தில் மிடுக்கு காட்டிய ஜோதிகா

    நடை, உடை, பாவத்தில் மிடுக்கு காட்டிய ஜோதிகா

    கதாநாயகி ஜோதிகா மிலிட்டரி உயர் பதவி அதிகாரி என்பதை அவரது பார்வை, நடை உடை மிடுக்கில் காண்பிப்பார். அரசுப்பள்ளியை சரியான பள்ளியாக மாற்ற எடுக்கும் நடவடிக்கையும் அதில் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பதும், அதன் பின்னணியில் அருகிலுள்ள தனியார் பள்ளி சேர்மன் இருப்பதும் காண்பிக்கப்படுகிறது. பள்ளியின் சுத்தம், மாணவர்களிடம் கனிவு, அடங்காத மாணவர்களிடம் கண்டிப்பு என ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்கிற ஏக்கத்தை நம்முள் விதைத்திருப்பார் இயக்குநர்.

    ராணுவத்தில் உயர் அதிகாரி, கிராமத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்

    ராணுவத்தில் உயர் அதிகாரி, கிராமத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்

    ராணுவத்தில் உயர் அதிகாரி ஜோதிகா பின்னர் அந்த பதவியை விடுத்து விட்டு ஏதோ ஒரு ஊரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக வருவதன் காரணம் பிற்பகுதியில் தெரிய வரும். பள்ளிக்கு பிரின்சிபலாக வரும் ஜோதிகா ஜாதி ரீதியாக மாணவர்களை பிரித்து வைப்பதும், பள்ளியில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகளும், உதவி தலைமை ஆசிரியர் கொட்டத்தையும் அடக்குவார். பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வருமானம் சேர்க்கும் வகையில் மாணவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ள அரசு பள்ளி நிலையைப் போக்க ஜோதிகா முயற்சி எடுப்பார்.

    இடை நிற்றல் குறித்து கவலைப்படும் ஜோதிகா

    இடை நிற்றல் குறித்து கவலைப்படும் ஜோதிகா

    முன்னாள் எம்எல்ஏவின் மகனை கண்டிக்கும் ஜோதிகா புத்தி சொல்லி அவனை விளையாட்டு வீரனாக மாற்றுவார். பள்ளியின் பொருட்களை எடுத்துச் செல்வதை தடுக்கும் பொழுது அடியாட்கள் வந்து ஜோதிகாவை தாக்க முயல அவர்களை ஜோதிகா சமாளிப்பதைப் பார்த்து அனைவரும் மிரண்டு விடுவார்கள். இதற்கிடையே ஒன்பதாம் வகுப்பில் பெயிலாக்கப்பட்டு வேலையில் இருக்கும் மாணவர்கள் பட்டியலை எடுத்து அவர்களை மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பார் ஜோதிகா.

    தனியார் பள்ளி முதலாளியாக ஹரீஷ் பேராடி

    தனியார் பள்ளி முதலாளியாக ஹரீஷ் பேராடி

    ஜோதிகாவின் செயலுக்கு மூத்த ஆசிரியை பூர்ணிமா பாக்யராஜ் மௌனமாக ரசித்துக் கொண்டிருப்பார். பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் மாணவர்களை ஜோதிகா தயார்படுத்தும் விதத்தில் மாணவர்கள் அனைவரும் வெகுவாக தேர்ச்சி பெற்று போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். ஆசிரியர்கள் ஜோதிகா பற்றி தெரிந்து விசுவாசமாக மாறுவார்கள். இது பக்கத்தில் உள்ள தனியார் பள்ளி முதலாளியை பாதிக்கும் எப்படியாவது ஜோதிகாவை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரைப் பற்றி புகார் தெரிவிப்பார்.

    ஆட்சியர் ஆய்வுக்கு வரும் சுவாரஸ்யமான காட்சி

    ஆட்சியர் ஆய்வுக்கு வரும் சுவாரஸ்யமான காட்சி

    ஜோதிகாவின் அரசுப்பள்ளியை பார்வையிட வரும் ஆட்சியர் ஜோதிகாவின் நிர்வாக திறமையை பார்த்து வியப்படைவார். பின்னர் ஜோதிகாவை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறிவிட்டுச் செல்வார். இதனிடையே ஜோதிகாவின் தந்தை மரணம் அடைய இந்த துக்கத்தை வெளிக்காட்டாமல் பள்ளிக்கு வருவார் ஜோதிகா. ஒரு கட்டத்தில் ஜோதிகாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் அவருக்கு எதிராக திரண்டு வருவார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களை முறைகேடாத தேர்வு எழுத வைத்ததாக ஜோதிகாவின் மீது புகார் அளித்து அவரை கைதும் செய்வார்கள்.

    கிராமத்திற்கு வந்த காரணம் இதுதான்

    கிராமத்திற்கு வந்த காரணம் இதுதான்

    மக்கள் திரண்டு போராட அரசு வேறு வழியில்லாமல் பணியும். ஜோதிகா அந்த ஊருக்கு எதற்காக தலைமை ஆசிரியராக வந்தார் என்பதை கடைசியில் சிறுகாட்சியின் மூலம் விளக்குவார்கள். பள்ளி மூத்த ஆசிரியை பூர்ணிமா பாக்யராஜின் மகனை ஜோதிகா காதலித்திருப்பார். ஆனால் அவர் திடீரென மரணமடைய இறுதி காலத்தில் அவர் தாயாருக்கு உதவுவதற்காக ஜோதிகா அந்த ஊருக்கு வந்திருப்பார் கடைசியில் ஜோதிகாவும், பூர்ணிமா பாக்யராஜும் ஒரே வீட்டில் வசிப்பதாக படம் முடியும்.

    Recommended Video

    Surya | 'பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது'... முதல்வருக்கு நன்றி *Kollywood | Filmibeat Tamil
    ஜோதிகாவுக்கு பேர் சொன்ன படம் ரட்சசி

    ஜோதிகாவுக்கு பேர் சொன்ன படம் ரட்சசி

    படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க செய்யது கவுதம் ராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். படம் வெளியான நேரம் கொரோனா காலக்கட்டம் என்பதால் படம் பெரும் வெற்றிப்பெறவில்லை ஆனால் படம் பெரிதாக பேசப்பட்டது. நல்ல படங்கள் தமிழில் வருவது அருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் அருமையான சமுதாய அக்கறையுள்ள அரசு பள்ளிகளின் நிலை பற்றி பேசி, ஆசிரியர் பெருமையையும் பேசிய படம் ராட்சசி. ஜோதிகாவுக்கு பேர் சொன்ன படம் இது.

    English summary
    Actress Jyothika starrer Raatchasi Movie, which talked about the importance of education and women's rights, has completed three years today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X