twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை..இடைக்கால தடை மீண்டும் நீட்டிப்பு

    |

    சென்னை: 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

    வருமான வரித்துறை ரெய்டு நடத்திய ஆவணத்தில் புலி படம் வருமானத்தை மறைத்ததாக தாமதமாக அபராதம் விதித்ததாக விஜய் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

    உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இடைக்கால தடையை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு.. பசியை தணிக்க யாருமில்லை என வருத்தம்! காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு.. பசியை தணிக்க யாருமில்லை என வருத்தம்!

    விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை

    விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை

    கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.

    புலி படத்தின் சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என அபராதம்

    புலி படத்தின் சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என அபராதம்

    அந்த ஆவணங்களை ஒப்பிட்டதில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

    வருமான வரித்துறை உத்தரவு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்

    வருமான வரித்துறை உத்தரவு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்

    இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் கடந்த மாதம் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16-க்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் விஜய் தரப்பில், "வரி ஏய்ப்பு செய்திருந்தால் அதற்கு அபராதத் தொகையை உடனேயே பிறப்பிக்காமல் 3 ஆண்டுகள் கழித்து காலம் தாழ்த்தி பிறப்பித்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இடைக்கால தடை மீண்டும் நீட்டிப்பு

    இடைக்கால தடை மீண்டும் நீட்டிப்பு

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    English summary
    Actor Vijay has been fined Rs 1.50 crore by the Income Tax Department for allegedly concealing the salary of Rs 15 crore received for the film 'Puli' Movie. Vijay's side pleads in the High Court that in the documents raided by the Income Tax Department, Puli Movie Film concealed the income and imposed a late penalty.The Madras High Court had already ordered an interim stay on the order and extended the stay again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X