பாரதிராஜாவுக்காக இளையராஜா செய்யப்போகும் காரியம் இதுவா?.. எல்லாமே நட்புக்காகத்தானாம்
சென்னை: Ilayaraaja (இளையராஜா) பாரதிராஜாவுக்காக இளையராஜா செய்யப்போகும் செயல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

அன்னக்கிளி: அன்னகிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இயக்குநர்களின் காத்திருப்பு: இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். அந்த ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி என்பது.
இளையராஜா - பாரதிராஜா: கோலிவுட்டில் எவர்க்ரீன் க்ளாசிக் கூட்டணிகளில் ஒன்று இளையராஜா - பாரதிராஜா. இருவரும் இணைந்து பணியாற்றிய 16 வயதினிலே, மண்வாசனை, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என பல படங்களின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். இந்நிலையில் பாரதிராஜாவுக்காக இளையராஜா ஒரு காரியம் செய்யப்போவதாக தகவல் ஒன்று ஓடுகிறது.
அதாவது பாரதிராஜாவுக்காக இளையராஜா ஒரு இசை கச்சேரியை நடத்தப்போவதாகவும் அதில் வரும் பணம் அனைத்தையும் பாரதிராஜாவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இசை கச்சேரியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











