கார்த்தியை காலி செய்த விஜய் ரசிகர்கள்?.. என்ன புதுசு புதுசா கெளம்புது.. முழு விவரம் உள்ளே

சென்னை: கார்த்திக்கு எதிராக விஜய்யின் ரசிகர்கள் செயல்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

The Information that Vijays fans are working against Karthi

பொன்னியின் செல்வன் வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.

ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் இந்த தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஏமாற்றம்: படத்தின் ட்ரெய்லர் நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தினாலும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கார்த்திக்கு என்னதான் ஆச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். முக்கியமாக இது ராஜுமுருகன் படம் மாதிரியே இல்லை அவ்வளவு போராக படம் செல்கிறது. படம் சுமார் ரகத்துக்கும் கீழேதான் என ஓபனாகவே சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

கார்த்தி Vs விஜய் ரசிகர்கள்: இந்நிலையில் கார்த்திக்கு எதிராக விஜய் ரசிகர்கள் திரும்பியிருப்பதாக திரைத்துறையில் புதிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது ஜப்பான் படத்தில் கார்த்தியே ஒரு படத்தில் நடிப்பது போன்று காட்சி வரும். அதில் ஜப்பான் கேரக்டர் பாடும்போது கீழே, இந்தப் பாடலை பாடியது உங்கள் கோல்டன் ஸ்டார் என்று ஒரு வாசகம் வரும்.

இது விஜய்யை கிண்டல் செய்வது போல் அமைந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். விஜய்யின் ஆரம்பகாலத்தில் தன்னுடைய படங்களில் அவர் பாடும்போது கீழே, இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் என்ற வாசகம் வரும். அதை கிண்டல் பண்ணும் தொனியில் கார்த்தி எப்படி நடிக்கலாம் என கூறி கார்த்தியையும், ஜப்பான் படத்தையும் பொளந்தெடுத்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கார்த்தி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றேதான் ஜப்பான் படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டுவருகின்றனர் என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X