twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்து பிரிவுல.. ஒத்த விருது கூட வாங்கலையே.. எங்கே சறுக்கியது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐரிஷ்மேன்?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல இயக்குநரான மார்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் வெளியான தி ஐரிஷ்மேன் திரைப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.

    92வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் யாரும் இல்லாததால், விறுவிறுவென விருதுகள் பிரபலங்களால் அறிவிக்கப்பட்டு, விழா செம்ம ஸ்பீடில் நிறைவடைந்துள்ளது.

    சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்த தி ஐரிஷ்மேன் திரைப்படத்திற்கு ஒரு விருதும் வழங்கப்படவில்லை.

    நெட்பிளிக்ஸ் படம்

    நெட்பிளிக்ஸ் படம்

    நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் மார்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் நடிப்பு அசுரன்களான ராபர்ட் டி நிரோ, அல் பசினோ மற்றும் ஜோ பெஸ்சி நடிப்பில் வெளியான படம் தி ஐரிஷ்மேன். பத்து பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு விருதையும் பெறவில்லை.

    மார்டின் ஸ்கார்சஸி

    மார்டின் ஸ்கார்சஸி

    ஜாம்பவான் இயக்குநரான மார்டின் ஸ்கார்சஸிக்கு 77 வயதாகிறது. இந்த வயதில் தி ஐரிஷ்மேன் போன்ற வித்தியாசமான கேங்ஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இந்த ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மிஸ் ஆகியுள்ளது.

    சிறந்த இயக்குநர் விருது

    சிறந்த இயக்குநர் விருது

    கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், The Departed படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை மார்டின் ஸ்கார்சஸி வென்றார். இவர் இயக்கத்தில் வெளியான குட் ஃபெலாஸ், இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ், டாக்ஸி டிரைவர், தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் விருது விழாக்களில் பல விருதுகளை அள்ளி உள்ளன.

    அதிகளவு எதிர்பார்ப்பு

    அதிகளவு எதிர்பார்ப்பு

    நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவான தி ஐரிஷ்மேன் திரைப்படம் நிச்சயம் பல ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பர சர்ச்சை

    விளம்பர சர்ச்சை

    ஆஸ்கர் விருதுகளில் வெற்றி பெறுவதற்காக சுமார் 700 கோடி வரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளம்பரத்திற்காக செலவு செய்ததாக, பல சர்ச்சைகள் ஆஸ்கர் விருது விழாவுக்கு முன்னதாக எழுந்தன. நெட்பிளிக்ஸ் பணம் கொடுத்து விருதுகளை பெறப்போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கு ஒரு விருதும் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வில்லனான வெளிநாட்டு படம்

    வில்லனான வெளிநாட்டு படம்

    தி ஐரிஷ்மேன், 1917, ஜோக்கர் படங்களுக்கு கிடைக்க வேண்டிய பல விருதுகளை கொரிய திரைப்படமான பாராசைட் படம் தட்டிச் சென்றது. சிறந்த திரைப்படம், சிறந்த அயல் மொழித் திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை என 4 பிரிவுகளின் கீழ் பாராசைட் இயக்குநர் போங் ஜூன் ஹோ விருதுகளை தட்டிச் சென்றார்.

    English summary
    In one of the most surprising award season snubs in recent years, The Irishman didn't take home a single award at the Oscars 2020.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X