Vidaamuyarchi - இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரம்.. விடாமுயற்சிக்கு சிக்கலா?.. இது என்ன புதுசா இருக்கே
சென்னை: Vidaamuyarchi Shooting (விடாமுயற்சி ஷூட்டிங்) இஸ்ரேல் - பாலஸ்தீன் போரால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்குக்கு சிக்கல் எழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகிவருகின்றன. இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.
விடாமுயற்சி ஷூட்டிங்: இதனையடுத்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த கேப்பை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்தார்.
ஷூட்டிங் ஆரம்பித்தது: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் போர்: இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன் நாட்டுக்கும் கடந்த சில நாட்களாக போர் நடைபெற்றுவருகிறது. அந்த போரின் தாக்கம் துபாய், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் கண்டிப்பாக எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கும் ஏதேனும் சிக்கல் எழலாம் என கூறப்படுகிறது. படக்குழு என்ன செய்ய காத்திருக்கிறதோ?..
டபுள் ஆக்ஷன்: இதற்கிடையே இந்தப் படத்தில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் என்றும் படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











