twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவா திரைப்பட விழாவில் சூர்யாவுக்கு நன்றி சொன்ன ரசிகர்கள்… ஜெய்பீம் 2 லீட் கொடுத்த ஞானவேல்

    |

    பனாஜி: கோவாவில் 53வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி இன்றோடு நிறைவடைகிறது.

    மொத்தம் 8 நாட்கள் நடந்த கோவா சர்வதேச திரைப்படம் விழாவில் ஜெய்பீம் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் கலந்துரையாடினர்.

    அப்போது ஜெய்பீம் படம் உருவான அனுபவம் குறித்து இயக்குநர் தசெ ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் மனம் திறந்து பேசினர்.

     ஆஸ்கர் தேர்வாளரையே பிரமிக்க வைத்த ஜெய்பீம்..எளிய மக்களின் கதை..ஓராண்டு நிறைவு ஆஸ்கர் தேர்வாளரையே பிரமிக்க வைத்த ஜெய்பீம்..எளிய மக்களின் கதை..ஓராண்டு நிறைவு

    அமேசானில் வெளியான ஜெய்பீம்

    அமேசானில் வெளியான ஜெய்பீம்

    கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. சூர்யா, மணீகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்கியிருந்தார். 1993ம் ஆண்டு விழுப்புரம் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது நடந்த சம்பவமே இந்தப் படத்தின் கதையாகும்.

    கோவா திரைப்பட விழாவில் கலந்துரையாடல்

    கோவா திரைப்பட விழாவில் கலந்துரையாடல்

    நேரடியாக அமேசானில் வெளியான ஜெய்பீம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன. மேலும், பல விருதுகளையும் வென்றுள்ள இந்தப் படம், கோவா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சினிமா பந்தி என்ற நிகழ்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினருடன் ரசிகர்கள் கலந்துரையாடினர். இதில், ஜெய்பீம் இயக்குநர் தசெ ஞானவேல், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் ஜெய்பீம் படம் குறித்த தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

    சூர்யாவுக்கு நன்றி சொன்ன ரசிகர்கள்

    சூர்யாவுக்கு நன்றி சொன்ன ரசிகர்கள்

    அப்போது ஜெய்பீம் போன்ற தரமான படத்தை தயாரித்த சூர்யாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் முன் பேசிய ஞானவேல், இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் முதலில் சூர்யாவை சந்தித்தேன். அதற்கு உடனே ஓக்கே சொன்ன சூர்யா, சில நாட்கள் கழித்து அந்த வழக்கறிஞர் சந்துரு கேரக்டரில் தானே நடிக்கிறேன் என்றார். ஒரு கமர்சியல் ஹீரோ ஜெய்பீம் படத்தில் நடித்ததே முதல் வெற்றி தான். அதோடு நீதிமன்றம் செட் போடுவதற்காக பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி, காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என ஒத்துழைப்புக் கொடுத்ததாக கூறினார்.

    மணிகண்டன் பகிர்ந்த அனுபவம்

    மணிகண்டன் பகிர்ந்த அனுபவம்

    தசெ ஞானவேலை தொடர்ந்து பேசிய மணிகண்டன், "முதலில் இந்தக் கதையை என்னிடம் கூறிய ஞானவேல் சார், இந்த ஸ்கிரிப்ட்டில் வேலை பார்க்க முடியுமா என்றார். அதற்கு ஓக்கே சொன்னதும், அப்படியே அந்த ராஜக்கண்ணு கேரக்டரில் நடிக்க முடியுமா எனவும் கேட்டார். எனக்கு அந்த கேரக்டர் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், உடனே ஓக்கே சொல்லாமல், மற்ற படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என சும்மா சொல்லிப் பார்த்தேன். பின்னர் இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என ஒத்துக்கொண்டேன். ஆனால், நான் எதிர்பார்க்காத நல்ல பெயர் எனக்கு இதில் கிடைத்துள்ளது என்றார்.

    ஜெய்பீம் 2 கண்டிப்பாக வரும்

    ஜெய்பீம் 2 கண்டிப்பாக வரும்

    தொடர்ந்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், "சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் சூர்யா நடிப்பதை போல, ஜெய்பீம் 2வில் நடிக்க வேண்டும்" என தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஞானவேல், ஜெய்பீம் கதையை போல நீதிபதி சந்துரு ஆஜரான நிறைய வழக்குகள் இன்னும் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக ஜெய்பீம் 2 கதையாக எடுப்போம். அதில், சூர்யாவும் நடிப்பார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

    English summary
    The 53rd International Film Festival in Goa, which started on the 20th, is coming to an end today. 280 films from 79 countries were screened at the festival. In this, director Gnanavel, actor Manikandan, and other members of the Jai Bhim team shared their experiences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X