ரசிகர்களை சூப்பர் ஜாலியாக்க வரும் ஜாலியோ ஜிம்கானா ஜோடி... ரசிகர்களும் தயார் தானுங்கோ!

சென்னை : தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் முதல் பாடல் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடல் இன்றைய தினம் வெளியாக உள்ளது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன்களில் சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.

வரவேற்பை பெற்ற முதல் சிங்கிள்

வரவேற்பை பெற்ற முதல் சிங்கிள்

படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், கடந்த மாதத்தில் படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியானது. இந்தப் பாடல் அனிருத் இசையில் அரபிக்குத்து என்ற பெயரில் வெளியானது. இந்தப் பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

20 கோடி வியூஸ்

20 கோடி வியூஸ்

இந்தப் பாடல் தற்போது 20 கோடி வியூஸ்களை நெருங்கியுள்ளது. இந்தப் பாடல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி பிரபலங்கள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாடலை மிகவும் விருப்பத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபலங்கள் ஆர்வம்

பிரபலங்கள் ஆர்வம்

சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்ட பிரபலங்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு வெளியான ப்ரோமோ பட்டையை கிளப்பி வருகிறது.

அடுத்தடுத்த ப்ரோமோக்கள்

அடுத்தடுத்த ப்ரோமோக்கள்

இந்தப் பாடலில் ஜாலியான விஜய், பூஜா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. இந்தப் பாடல் குறித்து இன்று காலையிலும் சன் பிக்சர்ஸ் புதிய ப்ரோமோவை வெளியிட்டிருந்தது. இதில் படத்தின் இயக்குநர், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டவர்கள் இணைந்து ஃபன் செய்திருந்தனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்போது மீண்டும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஜாலியோ ஜிம்கானா ஜோடி

ஜாலியோ ஜிம்கானா ஜோடி

அதில் ஜாலியோ ஜிம்கானா ஜோடி ரசிகர்களை சூப்பர் ஜாலியாக்க வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மணிக்கு இந்தப் பாடல் ரிலீசாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடம் பெற்றுள்ளனர். போஸ்டர் கலக்கலாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X