தி ஜங்கிள் புக்: சல்மான் கான், ஷாரூக்கான் சாதனையை முறியடித்த இந்தியச் சிறுவன்
சென்னை: ஷாரூக்கான், சல்மான்கான் படங்களின் வசூல் சாதனைகளை 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் முறியடித்திருக்கிறது.
இந்திய வம்சாவளிசிறுவனான நீல் சேதியின் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான 'தி ஜங்கிள் புக்' இதுவரை 144 கோடிகளை இந்தியாவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் ஷாரூக்கானின் 'தில்வாலே' மற்றும் சல்மான்கானின் 'பாடிகார்டு' படங்களின் வசூலை 'தி ஜங்கிள் புக்' முறியடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 4 வது வாரத்தில் இப்படத்தின் வசூல் 150 கோடிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 18 வது இடத்தையும் இப்படம் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

நேர்மறையான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் படத்திற்கு குவிந்த ஆதரவு, ரசிகர்களின் பாராட்டு போன்றவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என சினிமா நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன் அக்ஷய்குமாரின் 'ஏர்லிப்ட்' வசூல் சாதனையை 'ஜங்கிள் புக்' சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











