»   »  'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'... ரசிகர்களின் பாராட்டு மழையில் தி ஜங்கிள் புக்

'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'... ரசிகர்களின் பாராட்டு மழையில் தி ஜங்கிள் புக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியாகியிருக்கும் 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் வயது வித்தியாசமின்றி, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

அக்காலத்தில் தூர்தர்ஷனில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த கதை தான் ஜங்கிள் புக். கார்ட்டூன் வடிவில் வெளியான ஜங்கிள் புக்கைப் பார்த்து ரசித்தவர்கள் இன்றும் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

The Jungle Book Released India

மற்ற நாடுகளில் வருகின்ற ஏப்ரல் 16 ம் தேதி இப்படம் வெளியாகிறது. ஆனால் ஒருவாரம் முன்னதாகவே இப்படத்தை இந்தியாவில் வெளியிட்டு விட்டனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்திலும் இப்படத்தை வெளியிட்டு தயாரிப்புக் குழு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளது.

காட்டிற்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை விலங்குகள் எடுத்து வளர்க்கும். அந்த சிறுவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் புலியிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை.

சிறுவனின் பெயர் மோக்லி, புலியின் பெயர் ஷேர்கான், சிறுதையின் பெயர் பகீரா என்று இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ஜங்கிள் புக் தங்களை சிறுவயதிற்கே கைபிடித்து கூட்டிச் செல்வதாக, ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயரைச்சொல்லியும், சிறுவயதில் தங்களை எப்படியெல்லாம் ஜங்கிள் புக் வசீகரித்தது என்பதையும் கதைகதையாக படம் பார்த்த ஒவ்வொருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒவ்வொருவரின் அனுபவங்களையும் கேட்கும்போது இப்படத்தை தவற விடக்கூடாது என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இன்று வெளியாகியிருக்கும் ஜங்கிள் புக் ஒட்டுமொத்த ரசிகர்களுக்குமான கோடை விருந்து.

English summary
The Jungle Book Cartoon Movie Released in India on Today.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil