twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “காளி“ கையில் சிகரெட்.. இந்துக் கடவுளை அவமதிப்பதா?..இயக்குநரை கைது செய்ய கோரிக்கை !

    |

    சென்னை : காளி சிகரெட் புகைப்பது போன்று வெளியாகி உள்ள போஸ்டருக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வழுத்து வருகிறது.

    Recommended Video

    Leena Manimegalai-யின் ஆவண படத்தால் பாஜக-வினர் கொதிப்பு, “காளி” *TamilNadu | Oneindia Tamil

    கவிஞர்,எழுத்தாளர், இயக்குநர் பன்முகத் திறமை கொண்ட லீனா மணிமேகலை,காளி ஆவணப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது வெளியான அந்த போஸ்டர் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

    இந்துக்கடவுள் குறிவைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைதுசெய்யக்கோரி ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்டாக்கி வருகிறது.

    மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி.. ஆனா இந்த முறை ஜீ தமிழ் சேனல்ல நடிக்கறாங்க திருமதி செல்வம்! மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி.. ஆனா இந்த முறை ஜீ தமிழ் சேனல்ல நடிக்கறாங்க திருமதி செல்வம்!

    லீனா மணிமேகலை

    லீனா மணிமேகலை

    தமிழில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கி வருபவரும், சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர் லீனா மணிமேகலை. இவர் தற்போது "காளி" என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கோடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ArrestLeenaManimekalai

    ArrestLeenaManimekalai

    இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்துக் கடவுளை அவமதித்த இயக்குநர் லீலா மணிமேகலையை கைது செய்யக்கோரி சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    வழக்குப்பதிவு

    வழக்குப்பதிவு

    டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இயக்குநர் லீனா மணிமேகலை தனது புதிய ஆவண படமான 'காளி' தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார். காளி போஸ்டருக்கும், ஆவணபடத்திற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளா.

    முற்றிலும் தவறானது

    முற்றிலும் தவறானது

    இதை வன்மையாக கண்டித்துள்ள நடிகையும் மருத்துவருமான டாக்டர் ஷர்மிளா, இது மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. மதத்தின் மீது மரியாதை பரஸ்பரம் இருக்க வேண்டும். நீங்கள் நாத்திகராக இருந்தால் பரவாயில்லை, ஆனால் அது மற்றவர்களின் உணர்வுகளை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு இல்லை. இது முற்றிலும் தவறானது.. அன்பை மட்டும் பரப்புங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    வெட்கக்கேடானது

    வெட்கக்கேடானது

    மேலும்,ஒரு நெட்டிசன்ஸ், காளி தேவியின் வேடமிட்டு புகைபிடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது மலிவான விளம்பரமாகும். இந்துக் கடவுள்களை அவமதிப்பது வெட்கக்கேடானது. அப்படிப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களை திரைப்படம் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

    நாத்திகனுக்கு எந்த மதமும் அந்நியமே

    நாத்திகனுக்கு எந்த மதமும் அந்நியமே

    எனக்கென்னவோ இவர்கள் தான் அடிப்படையில் மத உணர்வாளர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த மதம் எனது சொந்த மதம், அதனால் எனக்கு அதனை சிறுமைப்படுத்த முழு உரிமை உள்ளது என்பது போல நடந்து கொள்கிறார்கள். நிஜ நாத்திகனுக்கு எந்த மதமும் அந்நியமே என பதிவிட்டுள்ளார்.

    English summary
    A poster for a documentary movie is trending on social media with the hashtag #arrestleenamanimekalai. Several claimed that the poster offended Hindu followers' religious sensibilities on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X