பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் அடுத்த சம்பவம் லோடிங்.. டைட்டில் என்ன தெரியுமா?
மும்பை: பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் நடித்து சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்து பண்டிட்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்றும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதையும் படமாக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே மிரள வைத்தார்.
இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பாலிவுட் ரசிகர்கள் தி காஷ்மீர் ஃபைல்ஸுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.

மோடி வரை புரமோஷன்
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் நடித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு பாஜகவினர் முழு ஆதரவை அளித்தனர். பிரதமர் மோடியை சந்தித்தும் படக்குழுவினர் பாராட்டுக்களை பெற்றது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேக்கிங் ரீதியாக இந்த படம் மிரட்டியது தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.

250 கோடி வசூல்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தென்னிந்திய திரையுலகம் பாலிவுட்டை அசால்ட்டாக ஓவர்டேக் செய்து விட்டது. இந்நிலையில், குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 250 கோடி வரை மிகப்பெரிய வசூல் வேட்டையை தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பெற்று அபார சாதனையை படைத்துள்ளது.

டெல்லி ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை உருவாக்க 4 ஆண்டுகள் தானும் தனது டீமும் கடும் உழைப்பு போட்டதற்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில், எனது அடுத்த படத்தின் டைட்டில் தி டெல்லி ஃபைல்ஸ் என அடுத்த குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி.
Recommended Video

என்ன கதை
90களில் காஷ்மீரை சேர்ந்த இந்து பண்டிதர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கதையை படமாக்கி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், டெல்லி ஃபைல்ஸ் என விவேக் அக்னிஹோத்ரி சொல்லி இருப்பதால் அடுத்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும், இந்த படமும் பாஜகவினருக்கு ஆதரவான படமாகவே இருக்குமா? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











