Don't Miss!
- Finance
அய்யோ இது மட்டும் நடந்திட கூடாது.. இந்திய மக்கள் பீதி..!
- News
தேநீர் விருந்து.. தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.. திமுக முடிவு என்ன?
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
இந்து தர்மத்தை அவமதித்தாரா அமீர்கான்? வங்கி விளம்பரத்தை பார்த்து விளாசிய பிரபல இயக்குநர்!
இந்து தர்மத்தை அவமதித்தாரா அமீர்கான்? வங்கி விளம்பரத்தை பார்த்து விளாசிய பிரபல இயக்குநர்!
மும்பை: அமீர்கான் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் புதிதாக வெளியாகி உள்ள ஏயூ வங்கி விளம்பரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
#AamirKhan_Insults_HinduDharma என்கிற ஹாஷ்டேக்கை போட்டு நெட்டிசன்கள் அமீர்கானையும் நடிகை கியாரா அத்வானியையும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் அமீர்கானை விளாசியுள்ள நிலையில், பலரது கவனமும் அந்த விளம்பரத்தின் மீது திரும்பி உள்ளது.
லிப்
கிஸ்
அடித்து
மோதிரம்
அணிவித்த
காதலன்..
அமீர்கான்
மகளுக்கு
அட்டகாசமாக
நடந்த
நிச்சயதார்த்தம்!

லால் சிங் சத்தா லாஸ்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாய்காட் லால் சிங் சத்தா ஹாஷ்டேக் பெரிதளவில் டிரெண்டான நிலையில், அந்த படம் வந்த சுவடே தெரியாமல் ஓடிடியில் வெளியாகி அங்கேயும் ஃபிளாப் ஆகி விட்டது. இந்து மதத்தை பிகே படத்தில் இழிவுப்படுத்தினார் அமீர்கான் என்றே பலரும் அந்த படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சர்ச்சை
இந்நிலையில், #AamirKhan_Insults_HinduDharma என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு அமீர்கானின் புதிய விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் புதிதாக போர்க்கொடியை தூக்கி உள்ளனர். அமீர்கான் மற்றும் கியாரா அத்வானியை விளாசி ஏகப்பட்ட ட்ரோல்களை குவித்து வருகின்றனர்.

என்ன பிரச்சனை
பொதுவாக இந்து மதத்தின் படி திருமணமான நிலையில், வீட்டிற்குள் முதன் முதலாக மணப்பெண் தான் காலடி எடுத்து வைக்க வேண்டுமாம். அதை மாற்றி மணமகனான அமீர்கான் உள்ளே நுழையும் படி விளம்பரத்தை இயக்கி உள்ளனர். இதுதான் இப்படியொரு பிரச்சனை வெடிக்கவே காரணம் என்கின்றனர். மணமகள் லட்சுமியை போன்றவள் என்றும் தேவி லட்சுமியையே அமீர்கான் அவமதித்து விட்டார் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்து திருமணம் மட்டும் ஏன்
அமீர்கான் ஏன் தொடர்ந்து இந்து மதத்தையே இழிவுப்படுத்தி வருகிறார். இந்து திருமணத்திற்கு பதிலாக, இஸ்லாமிய திருமணமோ, கிறிஸ்துவ திருமணத்தையே மாற்றி அமைக்கலாமே அப்படி ஏன் செய்யவில்லை என பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விளாசல்
நெட்டிசன்களை தாண்டி பிரபலங்களும் இந்த விஷயத்தை கையில் எடுத்து விளாசி வருகின்றனர். காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னோஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், கரப்ட்டான பேங் சிஸ்டத்தை முதலில் ஏயூ பேங்க் மாற்ற முயற்சிக்கலாம், இந்து மத சடங்கை மாற்ற நீங்கள் யார்? என்கிற கேள்வியை எழுப்பி விளாசித் தள்ளி உள்ளார் விவேக் அக்னிஹோத்ரி.