For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இப்படி ஆபாசமா படம் எடுக்காதீங்க.. சிறுமியை வைத்து ஷாருக்கானை விளாசிய காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்!

  |

  மும்பை: ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடல் நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த பாடலில் காவி நிற பிகினி அணிந்து நடிகை தீபிகா படுகோன் ஆபாசமாக நடனமாடியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  நடிகர் ஷாருக்கானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும், ஷாருக்கானையே உயிரோடு கொளுத்துவோம் என்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

  இந்நிலையில், சிறுமியை வைத்து பதான் பாடலுக்கும் எல்லை மீறி ஆபாசங்களை கொட்டும் பாலிவுட் திரையுலகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பதிவிட்டு இருப்பது தற்போது பெரும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது.

  அடேங்கப்பா 6 ஆயிரம் கோடி சொத்தா? ஷாருக்கான் வாழும் ராஜ வாழ்க்கை.. எத்தனை சொகுசு கார் தெரியுமா?அடேங்கப்பா 6 ஆயிரம் கோடி சொத்தா? ஷாருக்கான் வாழும் ராஜ வாழ்க்கை.. எத்தனை சொகுசு கார் தெரியுமா?

  பதான் பாடல்

  பதான் பாடல்

  இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இந்த படம் தேசபக்தியை முன்னிறுத்தும் படம் என கூறப்படும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பெஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின.

  ஆபாசத்தின் உச்சம்

  ஆபாசத்தின் உச்சம்

  பதான் பாடல் 135 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வரும் நிலையி,ல் அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது ஆபாசத்தின் உச்சம் என விளாசப்பட்டு வருகிறது.

  காவி பிகினி பிரச்சனை

  காவி பிகினி பிரச்சனை

  பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் விதத்தில் ஷாருக்கான் உடை அணிந்து ஆடுவதற்கு எதிராக சர்ச்சைகள் வெடித்தன.

  சிறுமியை வைத்து

  இந்நிலையில், சிறுமி ஒருவரை வைத்து பாலிவுட் இயக்குநர்களே, நடிகர்களே நல்ல கதைகளை படமாக எடுங்கள், ஆபாசத்தை இளைஞர்கள் மத்தியில் விதைக்காதீர்கள், அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனால், பாலியல் ரீதியாக பல தொல்லைகளை பிஞ்சு பெண் குழந்தை உள்பட பலரும் அனுபவிக்கிறோம் என பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

  காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

  காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

  இந்த ஆண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் 'வார்னிங்' கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

  எல்லை மீறும் ஓடிடிக்கள்

  எல்லை மீறும் ஓடிடிக்கள்

  நடிகைகளும், நடிகர்களும் விட்டால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக முழு நிர்வாணமாகவே நடித்து விடுவார்கள் போல.. அந்த அளவுக்கு ஓடிடியில் ஆபாச படங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றவர்களே இப்படி எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டினால் இளம் நடிகைகள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கு செல்வார்கள் என்றும் ட்ரோல்கள் கிளம்பி உள்ளன.

  English summary
  The Kashmir Files Director Vivek Agnihotri slams Shah Rukh Khan Pathaan song with a small girl video shocks bollywood fans. Pathaan first single Besharam Rang song contains extreme glamour dance from Deepika Padukone with hot and sexy steps.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X