பலருக்கு தூக்கமில்லாத இரவுகள்.. பிரகாஷ் ராஜை தாக்கிய காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

டெல்லி: காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விமர்சனம் செய்த பிரகாஷ் ராஜை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கடுமையாக தாக்கி ட்வீட் செய்திருக்கிறார்.

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த வில்லனும், குணசித்திர நடிகருமான பிரகாஷ் ராஜ், தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியல் சார்ந்த கருத்தை முன்வைத்துவருகிறார். குறிப்பாக இந்துத்துவா மற்றும் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வரும் அவர் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவும் செய்தார். பிரகாஷ் ராஜ் முன்வைக்கும் அரசியல் கருத்துக்கள் அனைத்தும் ஒருசேர விமர்சனத்தையும், ஆதரவையும் பெறக்கூடியவை.

 சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ்

சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ்

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காஷ்மீர் ஃபைல்ஸ். இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்னையில் இருக்கும்போது சிறுபான்மையினரை ஒடுக்குபவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் உருவாகியிருப்பதாக பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். அதேசமயம் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு பலர் ஆதரவையும் கொடுத்தனர்.

 கோவா திரைப்பட விழா ஜூரியின் விமர்சனம்

கோவா திரைப்பட விழா ஜூரியின் விமர்சனம்

இந்தச் சூழலில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த விழாவின் ஜூரியும், இஸ்ரேல் நாட்டின் இயக்குநருமான நாடவ் லேபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார தொனி கொண்ட இழிவான திரைப்படம்.

இதுபோன்ற மதிப்புமிக்க விழாவின் போட்டி பிரிவில் இந்தப் படம் வந்தது சரியானதாக தோன்றவில்லை" என வெளிப்படையாகவே பேசினார். அவரது பேச்சுக்கு அனுபம் கேர் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை முன்வைத்திருந்தனர். இருப்பினும், தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என நாடவ் தெளிவாக கூறிவிட்டார்.

 ஆஸ்கர் விருது நாமினேஷினில் காஷ்மீர் ஃபைல்ஸ் நிராகரிப்பு

ஆஸ்கர் விருது நாமினேஷினில் காஷ்மீர் ஃபைல்ஸ் நிராகரிப்பு

நிலைமை இப்படி இருக்க ஆஸ்கர் விருதில் கலந்துகொள்ள நாமினேஷனுக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஸ்கர் நாமினேஷனில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமானது நிகாரிக்கப்பட்டது. இதற்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

 ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது

ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது

இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், "ஷாருக்கான் நடித்த பதான் படத்தை சிலர் தடை செய்ய நினைத்தார்கள். ஆனால் அப்படம் வெளியாகி 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தை எதிர்த்த மதவெறியர்கள் பிரதமர் மோடியின் படத்தை 30 கோடி ரூபாய்க்குக்கூட ஓடவைக்கவில்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பிரசார படத்தை எடுத்து வெளியிட்டார்கள். அந்தப் படத்தை சர்வதேச ஜூரியும் விமர்சித்திருந்தார். அப்படி இருந்தும் புத்தி வரவில்லை. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர், 'ஏன் என் படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை' என கேட்கிறார். அந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கூர்கூட கிடைக்காது" என்று கூறீயிருந்தார்.

 காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் பதிலடி

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் பதிலடி

இந்நிலையி பிரகாஷ் ராஜின் விமர்சனத்துக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பேசும் வீடியோவை பகிர்ந்து, " தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பல அர்பன் நக்சல்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளது. பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்று சொன்ன ஒருவர், காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியாகி ஒரு ஆண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X