The Kerala Story 2 Box Office: சேட்டன்கள் அடித்த அடி.. காத்து வாங்கும் கேரளா ஸ்டோரி 2.. வசூல் எவ்வளவு?

சென்னை: தி கேரளா ஸ்டோரி 2 என்ற படம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் டிரைலர் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. கேரளம் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எல்லாம் அறிவித்தார். படத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. படத்தை நீதிமன்றம் பார்த்துவிட்டு, சில கருத்துக்களைத் தெரிவித்தது. இப்படி இருக்கையில் படம் கடந்த 27ஆம் தேதி வெளியாகியது. படம் வெளியாகி மார்ச் 3ஆம் தேதி உடன் ஐந்து நாட்கள் ஆகிறது. இந்த ஐந்து நாட்கள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தி கேரளா ஸ்டோரி 2 பியாண்ட் ட்ரூஸ் படத்தின் ட்ரைலர் வெளியானது போது கேரளம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது. காரணம் கேரளம் மாநிலத்தில் பரவலாக பெரும்பான்மையான மக்கள் உண்ணும் உணவில் மாட்டுக்கறிக்கு முதன்மையான இடம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், கேரளம் மாநிலத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் மிகவும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த ஒற்றுமையை சீர் குலைக்கும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியது.

The Kerala Story 2 Goes Beyond Faces Backlash and Day 5 Box Office Struggles Despite Controversy

தொடர் எதிர்ப்பு: டிரைலரில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி என்றால் அது, இந்து பெண்ணை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, அவரை மாட்டுக் கறி உண்ண வைக்கும் காட்சி தான். இதனால் பரவலாக இந்த படத்திற்கு கேரளம் மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

வசூல்: இப்படி இருக்கையில் படத்தின் வசூல் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று விவாதிக்கப்பட்டு வருகிறது. படம் சுமார் 30 கோடிகளுக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரூபாய் 10 கோடிகள் கூட வசூல் செய்ய திணறுவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் இல்லாமல், படம் வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்பதும் கேள்விக்குறிதான் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. அதேபோல் படம் பார்த்த ரசிகர்களும், இது போன்ற படங்கள் சமூகத்தில் பிளவைத் தான் அதிகரிக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X