திடீர் அலர்ஜி.. கை கால்களில் தடிப்பு.. பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் கவலை

சென்னை: பாலிவுட் நடிகை அடா சர்மா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையை பூர்வீகமாக கொண்ட அடா சர்மா, பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தான் ஒரு நடிகை ஆகவேண்டும் என முடிவு செய்தார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

The Kerala Story actress Adah Sharma admitted to hospital

நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால், சல்சா, ஜாஸ், பல்லட் மற்றும் பெல்லி போன்ற அனைத்து நடனத்தை முழுவதுமாக முறையாக கற்றிருந்தார்.

நடிகை அடா ஷர்மா: பட வாய்ப்புகளைத் தேடி வந்த அடா சர்மா 2009ம் ஆண்டு "1920" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது. பூரி ஜெகநாத் இயக்கிய ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தி கேரளா ஸ்டோரி: தமிழில் இவர் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், சிம்புவின் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவர் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளனர்.

The Kerala Story actress Adah Sharma admitted to hospital

திடீர் அலர்ஜி: இந்நிலையில், அடா சர்மா தனது இன்ஸ்டாகிராமில், நான் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். எனக்கு படை நோய் இருந்தது, இதனால், கை கால்களில் அலர்ஜி ஏற்பட்டு வீக்கமாக உள்ளது. நான் முழு கை உடை அணிந்து அதை மறைத்து இருக்கிறேன். ஆனால், மன அழுத்தத்தால் அது என் முகத்தில் தெரிகிறது. நான் மருந்தை உட்கொண்டேன், அந்த மருந்தினால் எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குமட்டல் வருகிறது. இதனால், இதற்காக இன்னொரு ஊசியை போட்டுக்கொள்கிறேன் என பகிர்ந்து இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி : ஆனால், அடா ஷர்மாவிற்கு திடீரென கடுமையான வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X