Siddhi Idnani: நைட்டியில் தி கேரளா ஸ்டோரி நடிகை.. ஆர்யா படத்துக்கு ப்ரமோஷன் ஆரம்பமாம்!

சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் கன்னத்தில் குழி விழ அழகு பதுமையாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. கவுதம் மேனன் இயக்கிய அந்த படம் சுமாரான வெற்றியை பதிவு செய்து செய்த நிலையில், சித்தி இத்னானி அடுத்ததாக தி கேரளா ஸ்டோரி படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து இருந்தார்.

அதா சர்மா மெயின் லீடு ரோலில் நடித்திருந்த தி கேரளா ஸ்டோரி படம் கடும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அந்த படம் எந்தவொரு மதத்துக்கும் எதிரான படம் இல்லை என்றும் தீவிரவாத இயக்கங்களின் வலையில் நம்ம ஊர் பெண்கள் சிக்கி விடக் கூடாது என்கிற விழிப்புணர்வு தான் அந்த படம் உணர்த்துகிறது என சித்தி இத்னானி முட்டுக் கொடுத்து இருந்தார்.

The Kerala Story actress Siddhi Idnani poses with nighty and starts promotion for her next movie

இந்நிலையில், அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சித்தி இத்னானி அந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை இன்ஸ்டாகிராமில் இருந்தே தொடங்கி விட்டதாக பதிவிட்டுள்ளார்.

கன்னக்குழி அழகி சித்தி இத்னானி: சிரிச்சா கன்னத்தில் குழி விழும் அழகே பெண்களுக்குத் தனி அழகு தான். சில ஹீரோயின்கள் மட்டுமே இந்த எக்ஸ்ட்ரா அழகுடன் திரையில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் கோலிவுட்டில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இத்னானியும் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகுடன் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

முதல் படத்திலேயே அதிக மேக்கப் இல்லாத தனது அழகால் சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்ட சித்தி இத்னானி அடுத்து ஆர்யாவின் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

The Kerala Story actress Siddhi Idnani poses with nighty and starts promotion for her next movie

தி கேரளா ஸ்டோரி நடிகை: சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் அதா சர்மாவை போலவே இவரும் ஒரு இந்து பெண்ணாக நடித்து இஸ்லாமியராக மதம் மாறியவராக நடித்திருந்தார்.

நர்சிங் கல்லூரியில் சக தோழியாக வரும் இஸ்லாமிய பெண் அதா சர்மா, சித்தி இத்னானி மற்றும் இன்னொரு கிறிஸ்துவ பெண் என மூவரையும் இஸ்லாமியராக மதம் மாற்றி பின்னர் அவரது உறவினர்கள் மூலமாக ஐஎஸ் தீவிரவாதியாக ஆக்கும் கதையில் சித்தி இத்னானி நடித்திருந்தார்.

The Kerala Story actress Siddhi Idnani poses with nighty and starts promotion for her next movie

சமீபத்தில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சித்தி இத்னானி அந்த படத்துக்காக ப்ரமோஷன் செய்ய ரசிகர்கள் அவரை விளாசி எடுத்தனர்.

நைட்டியில் சித்தி இத்னானி: இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி சர்ச்சையில் இருந்து நைஸாக கழண்டு கொண்டு தனது அடுத்த படத்திற்காக ப்ரமோஷனை ஆரம்பித்துள்ளார் சித்தி இத்னானி.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள சித்தி இத்னானி நைட்டி அணிந்து கொண்டு தலையில் புல்லு கட்டை சுமந்துக் கொண்டு செம கேஷுவலாக செல்லும் படத்தின் ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கான ப்ரமோஷனை ஆரம்பித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

சித்தி இத்னானியின் புதிய படத்தின் ஸ்டில்லை பார்த்த தி கேரளா ஸ்டோரி பட நடிகை அதா சர்மா ஹார்ட்டின்களை கமெண்ட்டுகளாக பதிவிட்டுள்ளார்.

The Kerala Story actress Siddhi Idnani poses with nighty and starts promotion for her next movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X