The Kerala Story: இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி... ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

சென்னை: சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

அதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கேரளாவில் 32000க்கும் அதிகமான பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டதாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்துள்ள வீடியோ ஆதாரம் வைரலாகி வருகிறது.

 The Kerala Story: AR Rahman shared a video against The Kerala Story film

இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி:சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் உண்மைக்கு புறம்பான கருத்துகளுடன் உருவாகியுள்ளது.

கேரளாவில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளில் உள்ளவர்களுக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும் படம் நெடுக வகுப்புவாத சிந்தனைகள் அதிகம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 The Kerala Story: AR Rahman shared a video against The Kerala Story film

முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரசாரமாக உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும், இந்தப் படம் மக்கள் மனதில் வெறுப்பு அரசியலை பரப்புகிறது என பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஒரு வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அதில், கேரளத்தில் காயங்குளம் என்னும் பகுதியின் அருகிலுள்ள சேராவள்ளி தொழுகைப் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்ய வசதி இல்லாமல் கஷ்டப்பட்ட அஞ்சு-சரத் ஆகியோரின் திருமணத்தை இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி இந்து முறைப்படி நடத்தி வைத்தனர். இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த திருமணத்தை பாராட்டி தான் ஏஆர் ரஹ்மான் டிவிட் செய்துள்ளார்.

 The Kerala Story: AR Rahman shared a video against The Kerala Story film

மேலும், "மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையே இல்லாமல், குணமாக்குவதாக இருக்க வேண்டும்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இதே வீடியோவை ஆஸ்கர் விருது வென்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பிரபலங்களும் ஷேர் செய்து தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

முன்னதாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்று வெறுப்பை விதைக்கும் படமாக தி கேரளா ஸ்டோரி உருவாகியுள்ளதாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்த்த ரசிகர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X