Kerala Story: கேரளா, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு.. கேரளா ஸ்டோரியில் இருந்து 10 காட்சிகள் நீக்கம்!

சென்னை: கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 10 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதா சர்மா, சித்தி இத்லானி, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி. உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், சர்ச்சைக்குரிய பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படம் மே 5ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

The Kerala Story top 10 controversial scenes removed after a heavy backlash

32000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டனரா?: கேரளாவில் அதிகபட்சமாக 32000 இந்து பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் காதலித்து அவர்களை மதமாற்றம் செய்து பின்னர் வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவல்களை சுதிப்தோ சென் இந்த படத்தில் சுட்டிக் காட்டி உள்ள நிலையில், இந்த படம் மதக் கலவரத்தை உண்டாக்கும் என கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

கேரளாவில் கடும் எதிர்ப்பு: பாலிவுட் இயக்குநர் இயக்கத்தில் இந்தி நடிகை அதா சர்மா நடித்துள்ள இந்த படத்தின் கதை முழுவதும் கேரளாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் அமைதியை சீர் குலைக்க இப்படியொரு படத்தை உருவாக்கி உள்ளனர் என்றும் இந்த கதையில் உண்மைத் தன்மையே இல்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

The Kerala Story top 10 controversial scenes removed after a heavy backlash

கேரள முதல்வர் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலரும் இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையிலும், சென்சார் ஆன படத்தை தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

தமிழ்நாட்டுக்கு உளவுத்துறை எச்சரிக்கை: தி கேரளா ஸ்டோரி படத்தை ரிலீஸ் செய்ய கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உளவுத்துறை தமிழ்நாட்டில் இந்த படம் வெளியானால் கலவரங்கள் வெடிக்கும் பிரச்சனை வரும் என்றே எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய கட்சிகளும் இந்து - முஸ்லிம் ஒருமைப்பாட்டை குழைக்கவே இப்படியொரு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் என விளாசி வருகின்றனர்.

The Kerala Story top 10 controversial scenes removed after a heavy backlash

10 காட்சிகள் நீக்கம்: இந்நிலையில், கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக இரு மாநிலங்களில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய 10 காட்சிகளை தணிக்கை துறை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், மே 5ம் தேதி வெளியாகும் இந்த படத்தை திரையரங்குகள் வெளியிட முன் வரக் கூடாது என்றும் படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X