CCL 2026: கிச்சா சுதீப் அணி சாம்பியன்..CCL ஃபைனல் த்ரில்: 6விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி
சென்னை: பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் லீக் (CCL) 2026 போட்டியில்,
கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி தங்களின் மூன்றாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பட்டத்தை வென்றது. பெங்கால் அணி, சிறப்பாக விளையாடிய போதிலும், இந்த சீசனில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
ஜனவரி 16ந் தேதி தொடங்கிய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிப்போட்டியில் பெங்கால் டைகர்ஸ் அணி, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில்,பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, வெல்ஸ் சென்னை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சிசிஎல் 2026 போட்டி: இதையடுத்து, இறுதி ஆட்டம் இன்று கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ்கை வென்ற பெங்கால் டைகர்ஸ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இதில், ஜாய் முகர்ஜி மற்றும் உதய் சிங் ஆகியோர் தொடங்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
அபார வெற்றி: இதில், 94 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த அணி, வெறும் 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில் இந்திராசிஷ் மற்றும் ஆனந்தா சில அதிரடி ஷாட்களை அடித்தாலும், பெங்கல் டைகர்ஸ் அணி 20 ஓவரில் 129 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 19.5 ஓவரில் 130 ரன்னுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா புல்டோசர்ஸ் அணி தங்களின் மூன்றாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பட்டத்தை வென்றது.


Click it and Unblock the Notifications











