twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலக மக்களின் ஆதர்ச இசை நாயகன் மைக்கேல் ஜாக்சன்..50 வயதில் மரணித்தவரின் மரணமில்லா வாழ்க்கை

    |

    சென்னை: இசை உலகில் பலர் வந்திருந்தாலும் , வாழ்ந்திருந்தாலும் இன்றும் முடிசூடா மன்னனாக நினைவுக்கூறப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். பாப் உலகின் மன்னன், நடனத்தில் புதிய உத்தியை புகுத்தியவரின் பிறந்த நாள் இன்று.

    வறுமையில் வாடி பின் நாளில் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையும் அமைந்திருந்தது. அதேப்போன்று மனிதாபிமானியாகவும் ஜாக்சன் இருந்தார்.

    உலகில் உள்ள மக்களை இசையால் மகிழ்வித்தவரின் இறுதி நாட்கள் மகிழ்ச்சியாக இல்லை, சோகத்துடன் திடீரென முடிந்தது அவரது வாழ்க்கை.

    கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் விஷால்: மிரட்டலாக வெளியானது மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் விஷால்: மிரட்டலாக வெளியானது மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்

    இசையுலகின் இடிமுழக்கம் ஜாக்சனின் 64 வது பிறந்த நாள்

    இசையுலகின் இடிமுழக்கம் ஜாக்சனின் 64 வது பிறந்த நாள்

    பாப் இசையுலகில் குறுகிய காலத்தில் தன் காந்தக்குரலாலும் நடனத்தாலும் புகழின் உச்சிக்கு சென்று துயரமிகு அவமானங்களுடன் மரணித்த மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் இன்று. இசையுலகிலும், நடனத்திலும் தனக்கு நிகர் இல்லை என நிரூபித்தவர் மைக்கேல் ஜாக்சன். அவர் வாழும்வரை அவர்தான் ராஜாவாக இருந்தார். வாழ்வின் இளம் வயதில் புகழின் உச்சிக்கு சென்று வாழவேண்டிய வாழ்வில் மத்திய பகுதியில் தனது 50 வது வயதில் மர்ம மரணத்தை தழுவினார் மைக்கேல் ஜாக்சன். இன்று அவரது 64 வது பிறந்தநாள்

    புதுமை அதுதான் ஜாம்பவான்களை வீழ்த்திய மைக்கேலின் திறமை

    புதுமை அதுதான் ஜாம்பவான்களை வீழ்த்திய மைக்கேலின் திறமை

    மடோன்னா, குயின், போனி எம், அபா, பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், பிரின்ஸ், ஏசி/டிசி, மெடாலிகா என பலர் இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டம். 1970 களில் ஜாக்சன் பிரதர்ஸ் இசைக்குழு பயணிக்க தொடங்கியது. 1971 ஆம் ஆண்டுமுதல் தனியாக பாப் பாடல்களை பாடத்தொடங்கினார் ஜாக்சன். அவரது வித்தியாசமான குரல் பாப் இசை உலகில் அனைவரையும் ஈர்த்தது. 1979 ஆம் ஆண்டு ஆப் தி வால் என்கிற ஆல்பத்தை வெளியிட்டார். அதில் இருந்த 4 பாடல்கள் அமெரிக்க அளவில் அவரை இசையுலகின் நாயகனாக மாற்றியது. இப்பாடல்கள் அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் இடம் பெற்றது. கிராமி அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

    ஜாம்பவான்களை மண்ணைக்கவ்வ வைத்த ஜாக்சன்

    ஜாம்பவான்களை மண்ணைக்கவ்வ வைத்த ஜாக்சன்

    பீட்டில்ஸ், அப்பா, போனி எம் போன்றவற்றின் இசைக்கலைஞர்கள் மேடையில் லேசாக நடனமாடியபடி பாடுவார்கள். கிடார், டிரம்ஸில் தங்கள் திறமையால் மிகப்பெரிய அளவில் பலர் புகழ் பெற்றனர். இவற்றிலிருந்து ஜாக்சன் செய்த சில மாற்றங்கள் அவரை அவர் மரணிக்கும் வரை இசை உலகின் மன்னனாக வைத்திருந்தது. மைக்கேலின் உலகப்புகழ்பெற்ற மூன் வாக் நடனம். அது மிகவும் கடினமான ஸ்டெப்சாகவும், நளினமாகவும் இருந்தது. சிறு சிறு சேஷ்டைகள், டக்கென நடனத்தை மாற்றுவது, கால்களில் வித்தியாச நடைமுறை, நடன அசைவுகள் காரணமாக அவர் தனித்துவமான புகழ் பெற்றார். அதனுடன் இனிமையான ஜாக்சனின் குரல், கிடார், டிரம்ஸ் இசை என கலவையாக படைத்தார். இதனால் ரசிகர்கள் வெறிகொண்டு அவரது இசையை ரசித்தனர்.

    தன்னந்தனிக்காட்டு ராஜா மைக்கேல் ஜாக்சன்

    தன்னந்தனிக்காட்டு ராஜா மைக்கேல் ஜாக்சன்

    உலகின் பல பெரிய இசைக்குழுக்கள் கோலோச்சிய காலக்கட்டத்தில் மைக்கேல் தன்னந்தனியனாக உருவெடுத்தார். அவரது ஆல்பங்களில் நவீன ஒலி-ஒளி அமைப்புகள், நடன அசைவுகள் என புதுமைகளை புகுத்தினார். மூன் வாக் நடனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மைக்கேல் ஜாக்சன் பாடல்களில் மட்டுமல்ல நடன அசைவுகள், மேடையில் அவர் காட்டும் வித்தைகள் மூலம் ரசிகர்கள் அவரை தெய்வமாக கொண்டாடினர். வெறுமனே பாடல்களாக இல்லாமல் அதில் ஒரு சின்ன கான்செப்ட் இருக்கும் வகையில் அல்லது உலகை பாதிக்கும் பிரச்சினைகளை சொல்வதுபோல் அமைத்தார். அவரது பாடல்கள் கருப்பர் இனப்பிரச்சினை, உலக அமைதி, மனித குல பிரச்சினைகளை பேசியது.

    விற்பனையில் சாதனைப்படைத்த ஆல்பங்கள்

    விற்பனையில் சாதனைப்படைத்த ஆல்பங்கள்

    1982-ல் திரில்லரில் மூன் வாக் நடனத்தை அறிமுகப்படுத்திய ஜாக்சன் 1987 பீட் என்கிற ஆல்பத்தை அளித்தார். இந்த ஆல்பத்தில் கிராவிட்டிக்கு எதிராக ஒரு நடன அசைவை அறிமுகப்படுத்தினார். நின்ற நிலையில் 45 டிகிரியில் சாய்வதுதான் அது. இந்த நடனம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. ரசிகர்கள் ஆல்பத்தை கொண்டாடினர். விற்பனையில் பெரும் சாதனையை பீட் ஆல்பம் பெற்றது. கருப்பின மக்கள் உரிமையை பேசிய ஜாக்சன் 1991 ஆம் ஆண்டு டேஞ்சரஸ் ஆல்பம் வெளியானது. இதில் உள்ள பாடல்கள் குறிப்பாக பிளாக் அண்ட் ஒயிட் பாடல் இனவெறி, நிறவெறிக்கு எதிராக அடக்கு முறைக்கு எதிராக பேசியது.

    கருஞ்சிறுத்தை மைக்கேல்

    கருஞ்சிறுத்தை மைக்கேல்

    ஒரு பாடலில் மேடையில் வரும் கருஞ்சிறுத்தை மைக்கேல் ஜாக்சனாக மாறும். பின்னர் மைக்கேல் தனியாக 5 நிமிடத்திற்கு ஆடுவார். இது கருப்பின மக்கள் தங்கள் மகன் தங்கள் உரிமைக்காக பாடி நடனம் ஆடுவதாக எண்ணி கொண்டாடினர். 'தே டோண்ட் ரியலி கேர் அபௌட் அஸ்' என்கிற பாடலும் கருப்பின மக்களின் உரிமை குறித்து பேசியது. குழந்தைகளையும், மிருகங்களையும் மிகவும் நேசித்த மைக்கேல் ஜாக்சன் இழந்து போன குழந்தைப்பருவத்திற்காக ஏங்கிய அவர் தனது குழந்தைப்பருவத்தில் பறிபோன நினைவுகளை வைத்து படைத்த சைல்ட்வுட் பாடலும் பிரசித்தி பெற்றது.

    சோகமான இறுதி ஆண்டுகள்

    சோகமான இறுதி ஆண்டுகள்

    ஜாக்சனின் திருமண வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருந்ததில்லை. விவாகரத்து காரணமாக தனது வருமானத்தில் பெரும் தொகையை ஜீவனாம்சமாக அளிக்கவேண்டி இருந்தது. கடைசி காலத்தில் எடுத்த சிகிச்சை அது தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட உடல் உபாதை பாலியல் வழக்கால் பெரும் தொகையை இழந்து மன உளைச்சலுக்கு ஆளான ஜாக்சன் நீண்ட ஆண்டுகள் ஓய்வுக்கு பின் மீண்டும் தனது பாடல்கள் மூலம் பெரும் முயற்சி எடுத்து வந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எப்போதும் பரபரப்பாகவே வாழ்ந்த மைக்கேல் ஜாக்சன் மரணமும் பரபரப்பாகவே முடிந்து போனது.

    ஜாக்சனின் அழியா புகழ்

    ஜாக்சனின் அழியா புகழ்

    என்றென்றும் நினைவுக்கூறப்படும் மைக்கேல் ஜாக்சனை இன்றும் மறக்காமல் இசை கடவுளாக ரசிகர்கள் மொழி, இனம், நாடு கடந்து கொண்டாடி வருகிறார்கள். அவரது பாடல்கள் மூலம் தங்கள் ஆதர்ச நாயகனை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். காற்றுள்ளவரை, இசையை கேட்கும் காதுள்ளவரை ஜாக்சன் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். They Don't Care About Us மைக்கேல் ஜாக்சனின் பாடல்களில் ஒன்று. ஒடுக்கப்பட்ட மக்களை கண்டுக்கொள்ளாத உலகிற்கு எதிரான குரலை உயர்த்திய மகத்தான கலைஞனின் 64 வது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்.

    English summary
    Although many people have come and lived in the world of music, Michael Jackson is still remembered as the uncrowned king. Today is the birthday of the king of the pop world, who introduced a new technique to dance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X