இது தெரியாம போயிடுச்சே.. மங்காத்தா செயினுக்கு பின்னால் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா?

சென்னை: தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவர் அணிந்திருக்கும் செயினுக்கு பின்னால் இருக்கும் கதை குறித்த சுவாரஸ்ய தகவலை காஸ்ட்யூம் டிசைனர் தற்போது ரிவீல் செய்துள்ளார்.

Recommended Video

Prasanna as Mankatha 2 Villain | Thala Ajith | Vankat Prabhu | Prasanna

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ராய் லக்‌ஷ்மி, ஆண்ட்ரியா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக லாக் டவுன் போடப்பட்டுள்ள நிலையில், நேற்று, கே டிவியில் மங்காத்தா படம் போடப்பட்டது.

டிரெண்ட்

டிரெண்ட்

தல அஜித் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஹிட்டான மங்காத்தா படம், நேற்று டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், தல ரசிகர்கள், ட்விட்டர் டிரெண்டிங்கில் மங்காத்தா ஹாஷ்டேக்கை உருவாக்கி வேற லெவலில் டிரெண்ட் செய்தனர். மங்காத்தா படத்தின் ஸ்க்ரீன் ஷாட்களும் வைரலாக பகிரப்பட்டன.

100 கோடி

100 கோடி

பில்லா ரீமேக் படத்திற்கு பிறகு பிக் பிரேக்கிங் கொடுக்க முடியாமல் இருந்த அஜித்துக்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும், பாக்ஸ் ஆஃபிஸில் 130 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது.

அஜித் செயின்

அஜித் செயின்

மங்காத்தா படத்தில் தல அஜித், ஒற்றை கை விலங்கு வடிவிலான செயினை அணிந்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில், டாலர்களை எரிக்கும் போது, அந்த டாலரையும் நடிகர் அஜித் தீயில் இட்டு எரிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வெங்கட் பிரபு படமாக்கி இருப்பார். ஆனால், அந்த செயினுக்கு பின்னால் இருக்கும் குட்டி ஸ்டோரியை தற்போது வெளியாகி உள்ளது.

மங்காத்தா செயின் மர்மம்

மங்காத்தா படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர், நேற்று மங்காத்தா ஹாஷ்டேக் டிரெண்ட் ஆன நிலையில், இதுவரை வெளியிடாத மங்காத்தா செயின் குறித்த மர்மத்தை வெளியிட்டுள்ளார். முதலில் டாலர் சிம்பள் போட்ட செயினை பயன்படுத்தவே வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால், இறுதியில், தான் ஹேண்ட் கஃப் லாக்கெட் செயின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாலர்களுடன்

டாலர்களுடன்

மங்காத்தா படத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பல கோடி பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இணைந்து, அவர்களுக்கே தெரியாமல் ஓய்வில் இருக்கும் போலீஸ் அதிகாரியான அஜித், மொத்த டாலர்களையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆவார். டாலர்களுடன் அந்த டாலர் லாக்கெட்டை எரிக்க திட்டமிட்டு இருந்த வெங்கட் பிரபு, கடைசியில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாராம்.

மங்காத்தா 2

மங்காத்தா 2

மங்காத்தா படத்தை நேற்று டிவியில் பார்த்த அஜித் ரசிகர்கள், மீண்டும் வெங்கட் பிரபு, அஜித் காம்போ இணைந்து மங்காத்தா 2 படத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்கட் பிரபுவும் தல அஜித்தின் ஓகே எனும் ஒற்றை வார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். வலிமை ரிலீசுக்குப் பிறகு மங்காத்தா 2வுக்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X