அய்யோ.. கல்லு மாதிரி இருந்த மனுஷன்.. இன்னைக்கு... ரோபோ சங்கரின் கலங்க வைத்த போட்டோ!
சென்னை: தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் துடிப்பான நடிப்பல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். விஜய்காந்த் போல, பேசி, ஆட்டம் போட்ட ரோபோ சங்கர் பாடி பில்டர் என்பதால் கல்லு மாதிரி தனது உடலை வைத்து இருப்பார். மருத்துவமனையில் கடைசியாக சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர்.
ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி என மேடைக் கலைஞராகவே தன் வாழ்வைத் தொடங்கிய ரோபோ சங்கர். ரோபோ போல உடல் அசைவுகளைச் செய்து மக்கள் மனதை கவர்ந்ததால், அதுவே அவரின் அடையாளமாக மாறி, 'ரோபோ சங்கர்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், ஜெயம் ரவி நடித்த 'தீபாவளி' படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்த ரோபோ சங்கர், 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் சவுண்ட் சுதாகர் கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

ரோபோ சங்கர்: அதைத்தொடர்ந்து தனுஷூடன் மாரி படத்திலும், விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்.டைமிங் மிஸ் ஆகாத ரெய்மிங் காமெடி இவரின் தனித்துமான ஸ்டைல். இப்படி தனது திறமையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ரோபோ சங்கருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரின் உடலை மிகவும் மோசமாகி அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். இனிமேல் ரோபோ சங்கர் பிழைப்பது கஷ்டம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதில் இருந்து மீண்டு வந்தார்.
ரசிகர்கள் வேதனை: மீண்டு வந்த கையோடு, தனது ஒரே மகளான இந்திரஜாவிற்கு திருமணத்தை செய்துவைத்தார். இதையடுத்து இந்திரஜாவிற்கு ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், நாளை மறுதினம் தனது பேரனுக்கு காது குத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், செவ்வாய் கிழமை நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்றிரவு அவரின் உடல் நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து அவரின் உயிர்பிரிந்தது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.:
கடைசி போட்டோ: வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரோபா சங்கர் மருத்துவமனையில் கடைசியாக சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கல்லு மாதிரி இருந்த மனுஷன்.. இன்னைக்கு இப்படியா என கண்கலங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











