கடைசி வரை நிறைவேறாத சேஷுவின் ஆசை.. அடக்கடவுளே.. கலங்கும் குடும்பம்!
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகர் சேசு மாரடைப்பு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலே அவர் உயிரிழந்துவிட்டார் என அவரது நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான ஒரு படத்தை எடுத்து, அதில் நகைச்சுவையை கலந்து, அதை அப்படியே உள்டா புள்டா செய்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகர் சேஷு: லொள்ளு சபா நிகழ்ச்சி சந்தானத்தை மட்டும் வளர்த்துவிடவில்லை, இந்த நிகழ்ச்சியில் நடித்த ஜீவா, மனோகர், சுவாமி நாதன், உதய், ஈஸ்டர், சாஷா, சேஷு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். சந்தானம் நடித்த A1 படத்தில் இவரின் நகைச்சுவை பேசப்பட்டதை தொடர்ந்து, சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
மாரடைப்பால் உயிரிழந்தார்: இவர் கடைசியாக சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசும்படி இருந்தது. இந்த படத்திற்கு பிறகு, சேஷுக்கு படவாய்ப்பு அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கடந்த 15ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சேஷுவின் உயிர் பிரிந்தது.
நள்ளிரவே ஓடி வந்த சந்தானம்: அவரின் மறைவு செய்தி கேட்டு நள்ளிரவே ஓடி வந்த சந்தானம், ரொம்ப தங்கமான மனுஷன், டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்திலும் அவருக்கு ரோல் கொடுக்க சொல்லிக் கேட்டிருந்தேன். அவருக்கான கதாபாத்திரமும் ரெடியா இருக்கு, ஆனால், அதற்குள் இப்படி எங்களை விட்டுட்டு போவாருன்னு நான் நினைச்சு கூட பார்க்கல என நடிகர் சந்தானம் வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
கடைசி ஆசை: மேலும், சேஷுவின் கடைசி ஆசையே, உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்பது தானாம். இதை அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறதார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்த சேஷுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமலே இந்த உலகத்தைவிட்டு பிரிந்துவிட்டார் என்று சேஷுவின் நண்பர்கள் கண்ணீர் மல்க கூறிவருகின்றனர். சேஷுவின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











