twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்ட கமலின் மருதநாயகம் தொடக்கவிழா: ப்ளாஷ்பேக் ஸ்டோரி

    |

    சென்னை: ராணி இரண்டாம் எலிசபெத் 1952ல் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.

    இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவர் ராணி இரண்டாம் எலிசபெத்.

    1997ல் சென்னையில் நடைபெற்ற கமலின் மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    கனவு படத்தை மீண்டும் தூசி தட்டும் கமல்.. பிரம்மாண்ட படைப்பான மருதநாயகம் உருவாகுமா?கனவு படத்தை மீண்டும் தூசி தட்டும் கமல்.. பிரம்மாண்ட படைப்பான மருதநாயகம் உருவாகுமா?

    நீண்ட காலமாக மகாராணியாக இருந்தவர்

    நீண்ட காலமாக மகாராணியாக இருந்தவர்

    இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலம் மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத். இவர் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96. 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி. இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர், கிரேக்கம் மற்றும் டென்மார்கின் இளவரசராக இருந்த பிலிப்புடன் காதல் கொண்ட நிலையில் தனது பட்டத்தை துறந்து 1947ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

    ராணி எலிசபெத்துக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

    ராணி எலிசபெத்துக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

    கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமாக இருந்ததால், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதனையடுத்து பால்மோர், பக்கிங்காம், விண்ஸர் அரண்மனைகளுக்கு சென்ற மக்கள் ராணி எலிசபெத்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார்.

    இந்தியாவிற்கு 3 முறை வருகை

    இந்தியாவிற்கு 3 முறை வருகை

    ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவிற்கு 3 முறை வருகை தந்துள்ளார். முதல் முறையாக 1961ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த அவர், அதன் பிறகு மும்பை, ஜெய்ப்பூர், ஆக்ரா, கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களுக்குச் சென்றார். அப்போது சென்னையில் பெருந்தலைவர் காமராசரை அவர் சந்தித்தார். 1983ல் இந்தியா வந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அன்னை தெரசா ஆகியோரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் மூன்றாவது முறையாக 1997 இல் இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத், கமலின் மருதநாயகம் படத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார்.

    மருதநாயகம் படப்பிடிப்பில் 20 நிமிடங்கள்

    மருதநாயகம் படப்பிடிப்பில் 20 நிமிடங்கள்

    1997 அக்டோபர் 16ம் தேதி மருதநாயகம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது. அப்போதே மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் இந்தத் திரைப்படம் உருவாக இருந்தது. இப்படியொரு நிலையில் எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்துகொண்டார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினி, சிவாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இரண்டாம் எலிசபெத் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார், இதனால் அப்போதே இந்தப் படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

    மீண்டும் ட்ரெண்டாகும் மருதநாயகம்

    மீண்டும் ட்ரெண்டாகும் மருதநாயகம்

    மருதநாயகம் படத் தொடக்கவிழாவில் பங்கேற்ற இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் போட்டுக் காட்டப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் மட்டுமல்ல, மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்களும் அது மட்டும்தான். இப்போதும் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக மருதநாயகம் இருந்து வருகிறது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, மருதநாயகம் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Queen Elizabeth II was crowned Queen of England in 1952. He ruled England for about 70 years. In 1997, Queen Elizabeth attended a special guest at the shooting of Kamal's Marudhanayagam in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X