நடிகர் பிரசாந்த்தின் சின்ன பாட்டி தான் ஜெயந்தி… அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சென்னை : மறைந்த பழம் பெரும் நடிகை ஜெயந்தி, நடிகர் பிரசாந்த்தின் சின்ன பாட்டி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மூத்த நடிகை ஜெயந்தி இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 76.

இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட படங்கள்

500க்கும் மேற்பட்ட படங்கள்

1945ம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி கர்நாடக மாநிலம் பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருடன் 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

மிஸ் லீலாவதி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஜெயந்தி. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் இந்திரா காந்தி கையில் பெற்றார். மேலும், அந்த படத்தில் ஸ்கர்ட் ஷர்ட்ஸ் மற்று உடைகளை அறிமுகப்படுத்தினார். கன்னடத்தில் முதல் முதலாக நீச்சலுடையிலும் இவர் நடித்துள்ளார்.

தமிழில் ஏராளமான படங்கள்

தமிழில் ஏராளமான படங்கள்

எம்.ஜி.ஆர்,ஜெமினி கணேசன்,நாகேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். எதிர்நீச்சல், பாமா விஜயம், இருகோடுகள், வெள்ளி விழா போன்ற திரைப்படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்தார்.

பிரசாந்தின் சின்னபாட்டி

பிரசாந்தின் சின்னபாட்டி

மறைந்த ஜெயந்தி ஒரு வகையில் நடிகர் பிரஷாந்தின் சின்னபாட்டி என்பது தற்போது தெரியவந்துள்ளது. எப்படின்னா, நடிகர் தியாகராஜனின் மனைவி பெயர் சாந்தி. இவர் மறைந்த பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகரான பெகட்டி சிவராமின் மகள் ஆவார்.

2வது மனைவி ஜெயந்தி

2வது மனைவி ஜெயந்தி

இந்த பெகட்டி சிவராமுக்கு 2 மனைவியர், அதில், 2வது மனைவிதான் ஜெயந்தி. சிவராமுக்கு முதல் முனைவி மூலம் 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயந்தி மூலம் ஒரு மகனும் உள்ளனர்.முதல் மனைவியின் மகள் தான் பிரசாந்த்தின் தாயார் சாந்தி. இந்த வகையில் ஜெயந்தி, பிரஷாந்த்துக்கு சின்ன பாட்டி முறை வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X