திடீரென வைரலாகும் விஜே சித்ராவின் உருக வைக்கும் வீடியோ...காரணம் இது தான்

சென்னை : புகழ்பெற்ற டிவி நடிகையான விஜே சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையும் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என உறுதிப்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் ரவி கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளியே வந்தார். இருப்பினும் சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார், அன்று அறையில் நடந்தது என்ன என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் தற்போது வரை மர்மமாகவே உள்ளன.

The late VJ Chithras unseen emotional throwback videos move fans to tears

சைகாலஜி படித்தவரான சித்ரா, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட கூடியவர். பலருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தற்போது சித்ரா வெளியிட்ட 2 வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதை பார்த்து சித்ராவின் ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

அந்த வைரல் வீடியோ கடந்த ஆண்டு அன்னையர் தினத்தன்று எடுக்கப்பட்டது. கோயிலில் தனது அம்மாவுக்கும், அப்பாவிற்காக சித்ரா சிறப்பு பூஜை நடத்திய போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் சித்ராவின் நண்பர்கள், சித்ரா தனது தாய்-தந்தையை தெய்வத்திற்கு சமமாக நினைப்பவள். அதனால் தான் கடவுளுக்கு பதில் அவள் தனது தாய்- தந்தைக்கு பூஜை செய்தாள் என குறிப்பிட்டிருந்தனர்.

சித்ரா உயிரிழந்து 5 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், இந்த ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு சித்ராவின் ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை யூட்யூப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X